வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்ரம் பட 500 கோடி வசூலுக்கு லோகேஷ் மட்டுமே காரணம்.. கமலஹாசனை சீண்டி பார்க்கும் தயாரிப்பாளர்

உலகநாயகன் கமலஹாசன் பல வருடம் சினிமா துறையில் இருந்தாலும் அவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் தான் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இப்படம் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. விக்ரம் படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் விக்ரம் படத்தின் வெற்றிக்கு லோகேஷ் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கமலஹாசனை சீண்டும் விதமாக சில விஷயங்களையும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read :ஒரே திரையில் பட்டையைக் கிளப்ப வரும் டில்லி, ரோலக்ஸ்.. லோகேஷ் செய்ய காத்திருக்கும் சம்பவம்!

அதாவது தயாரிப்பாளர் கே ராஜன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம் கமலஹாசன் இப்படத்தில் எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்தது தான் எனக் கூறி உள்ளார். அதாவது கமலஹாசன் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் கதையில் நிறைய மாற்றங்கள் சொல்வார்.

இதனால் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் நிறைய படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. ஆனால் கமலஹாசன் ஒரு நல்ல நடிகர், சகலகலா வல்லவன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படத்தில் நடிப்பதை காட்டிலும் தேவையில்லாமல் கதையில் தலையிடுவது அவருடைய வாடிக்கை.

Also Read :தியேட்டரை தாண்டி ஓடிடியிலும் சாதனை படைத்த விக்ரம்.. படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

இது சினிமா துறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் விக்ரம் படத்தில் கமலஹாசன் நடித்து மட்டும்தான் கொடுத்துள்ளார். லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க கதையில் கமலஹாசன் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால்தான் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதுமட்டுமன்றி அரசியலிலும் கமலஹாசனால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. நீ எல்லாம் அரசியலுக்கு லாயக்கு இல்லை என மக்கள் கமலஹாசனை வீட்டுக்கு அனுப்பியதாக கே ராஜன் அந்த ஊடகத்தில் பேசியிருந்தார். தற்போது உலக நாயகன் ரசிகர்கள் அந்த தயாரிப்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also Read :அதை பற்றி பேச கமலுக்கு தகுதியே இல்ல.. பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

Trending News