திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி படத்திற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்.. அப்டேட்டுகளில் அதிரடி கிளப்பும் சூப்பர் ஸ்டார்

Thalaivar 171: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயின் லியோ படத்தின் பிரீ ப்ரொடக்சன் வேலைகளில் பயங்கர பிசியாக இருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. லியோ படம் முடித்த கையோடு இவர் தன்னுடைய அடுத்த படவேலைகளை தொடங்க இருக்கிறார் சமீபத்தில் லோகேஷ் நடிகர் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் பண்ண இருப்பதாக ஆதாரமற்ற செய்திகள் முதலில் வெளியாகின. சூப்பர் ஸ்டார் படத்தில் லோகேஷை இணைய வைக்க பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று, தற்போது தலைவரின் 171 படத்தை இயக்கப் போவது லோகேஷ் தான் என்பது உறுதியாகி இருக்கிறது.

Also Read:ஜெயிலர் பட நடிகரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய தனுஷ்.. மாமனாரை பழிவாங்க இப்படியும் செய்யலாம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. சமீப காலமாக இந்த அளவுக்கு ஒரு வெற்றிப் படம் இல்லாமல் இருந்த ரஜினிக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் உற்சாகத்திலேயே ரஜினி அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது திரைப்படத்திற்காக ஜெய் பீம் படைய இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

Also Read:30 ஆயிரம் சம்பளத்தில் இருந்து 5 மடங்கு ரஜினியை உயர்த்திய படம்.. வியாபாரத்தை கற்றுக்கொடுத்த முதலாளி

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ளேயே ரஜினியின் 171 வது படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படம் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது பற்றி இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் தான் என நடிப்பது வழக்கம். அப்படி இருக்கும்பொழுது தற்போது அவருடைய படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது தான் ரஜினியின் கடைசி படம் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read:ரஜினி எல்லாம் பேச உனக்கு தகுதி இருக்கா.? அக்கட தேசத்து நடிகருடன் சண்டை செய்து பதிலடி கொடுத்த பயில்வான்

Trending News