புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

650 கோடி வசூல் செய்தாலும் ரஜினியுடன் கூட்டணி சேர மாட்டேன்.. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு

Lokesh Kanagaraj – Rajinikanth: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இதற்கு மிக முக்கிய காரணமாக ரஜினிகாந்த் தான் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு லோகேஷ் உடன் படம் பண்ண வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்தது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு லோகேஷும் ரஜினிக்காக படம் பண்ண ஓகே சொல்லி இருந்தார்.

Also Read:டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?

இந்த தகவல் உறுதியான பிறகுதான், விக்ரம் படத்திற்கு முன்னரே லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகிய தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த சந்திப்பு தான் தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் வெளியேறவும் காரணமாக அமைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்களை இந்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கு கதை சொல்லி அவர் மறுத்து விட்ட பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதோடு கிட்டதட்ட 650 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த படத்தில் ரஜினி யாரும் எதிர்பார்க்காத ஒரு வேலையை செய்திருக்கிறார்.

Also Read:உடைக்க முடியாத சாதனையை படைத்த ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்.. 72 வயதிலும் நின்னு பேசும் ரஜினி

அதாவது லோகேஷ் கனகராஜ் சொல்லிய கதையின் ஒரு ஸ்டண்ட் பகுதியை ரஜினி, நெல்சன் இடம் சொல்லி அதை ஜெயிலர் படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த காட்சியை பார்த்த லோகேஷ் பயங்கரமாக அப்செட் ஆகிவிட்டார். இதுதான் தலைவர் 171 லிருந்து விலக லோகேஷ் முடிவெடுத்ததன் காரணம்.

என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரை வைத்து படம் பண்ணினால் கோடி கணக்கில் லாபம் அள்ளலாம் என்று இருந்தாலும், தன்னுடைய அனுமதியில்லாமல் தான் சொல்லிய கதையை இப்படி உபயோகப்படுத்தியதால், அப்படி ஒரு வெற்றியே தனக்கு வேண்டாம் என உதறி தள்ளி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Also Read:ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

Trending News