சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அட இது நல்ல காம்போவா இருக்கே.. ரத்த களரியாக வெளியான லோகேஷின் புதுப்பட போஸ்டர்

Director Lokesh: லோகேஷ் தற்போது தலைவர் 171ல் பிஸியாக இருக்கிறார். விரைவில் இதன் டைட்டில் டீசர் வெளிவர உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சூப்பர் அப்டேட் ஒன்றை அவர் கொடுத்துள்ளார்.

பென்ஸ் பட போஸ்டர்

lokesh-benz
lokesh-benz

அதன்படி லோகேஷின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தங்களுடைய புது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தின் கதையை லோகேஷ் எழுதியுள்ளார். இதன் போஸ்டர் தான் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்

பென்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரே வேற லெவலில் வித்தியாசமாக இருக்கிறது. போர் வீரர்கள் போட்டிருக்கும் மாஸ்க் ரத்த களரியாக இருப்பது போல் போஸ்டர் உள்ளது.

அதில் ஆபத்தான போர் வீரன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து படம் பீரியட் கால கதையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வழக்கம் போல ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என்பதும் தெரிகிறது.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக இப்படம் இருக்கிறது. அதனாலயே ரசிகர்கள் பட குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News