Lokesh Kanagaraj-Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் சமீபத்தில் இவருக்கு மிகப்பெரிய ஆசையாக இருந்த ஒரு விஷயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது தான். அதேபோல் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் தான் இயக்க இருக்கிறார் என கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதியாகி இருந்தது.
ரஜினி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த பிறகும் கூட, லோகேஷ் கனகராஜ் ரொம்பவே யோசித்து வந்தார் என அப்போது தகவல்கள் வெளியாகின. இதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் ஹீரோக்களுக்காக படம் பண்ணும் இயக்குனர் இல்லை. தான் நினைத்த கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கக் கூடியவர்.
Also Read:டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?
ரஜினிக்காக படத்தின் கதையையும், காட்சியையும் மாற்றி விட வேண்டிய சூழ்நிலை வருமோ என்று தான் லோகேஷ் மறுத்து வந்தார். பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவர் கிரீன் சிக்னல் காட்டி இருந்தார். இந்த நேரத்தில் ரஜினி செய்த ஒரு வேலையால், வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் தாழியை உடைத்த கதையாய் மொத்தமும் சொதப்பி இருக்கிறது.
அதாவது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே லோகேஷ் மற்றும் ரஜினி கதை விவாதத்திற்காக அடிக்கடி சந்தித்து வந்திருக்கிறார்கள். அப்போது சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது லோகேஷ் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் லியோ படத்தை பற்றி விசாரித்த ரஜினி, காட்சிகள் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று பேசி போட்டு வாங்கி இருக்கிறார்.
Also Read:உடைக்க முடியாத சாதனையை படைத்த ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்.. 72 வயதிலும் நின்னு பேசும் ரஜினி
லோகேஷும் ரஜினியை நம்பி லியோ படத்தின் ஒரு காட்சியை பற்றி சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டுக் கொண்ட ரஜினி அப்படியே அந்த காட்சியை பற்றி நெல்சனிடம் சொல்லிவிட்டாராம். இருவரும் சேர்ந்து லோகேஷ் சொன்ன அந்த சீனை ஜெயிலர் படத்தில் வைத்திருக்கிறார்கள். படம் ரிலீசான பிறகு தான் லோகேஷுக்கு இது தெரிந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டாரை நம்பி சொன்ன விஷயம் இப்படி அவருக்கே ஆப்பாக வந்து முடியும் என லோகேஷ் நினைக்கவில்லை. இதனால் ரஜினி மீது பயங்கர அப்சட்டில் இருக்கிறார் லோகேஷ். தலைவர் 171 படத்தை இயக்குவதையும் கைவிடும் திட்டத்தில் இருக்கிறாராம். ஒரு சீனுக்கு ஆசைப்பட்டு பட வாய்ப்பையே இழந்திருக்கிறார் ரஜினி.