திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காது குத்திய லோகேஷ்.. ரொம்ப பேசக்கூடாது, படத்தில் வில்லனுக்கு பெரிய ஆப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட லியோ படம் சூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் நடத்தப்பட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இதுவரை எல்லா நடிகர்களின் போர்ஷனையும் முடித்து வருகிறார்கள்.

Also Read: அதிக வியூசை பெற்று முதல் 5 இடத்தை பிடித்த பாடல்கள்.. அரபிக் குத்தை மிஞ்சிய ரவுடி பேபி

இப்பொழுது கடைசியாக அர்ஜுன் போர்ஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜுன் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சஞ்சய் தத்துக்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்கப் போகிறார். ஆனால் இந்த படத்தில் இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே இருப்பதால் இதுவரை மன்சூர் அலிகான் நடிக்க கூடிய காட்சிகள் இதுவரை படமாக்கப்படவில்லை.

அர்ஜுன் உடன் மன்சூர் அலிகான் காம்பினேஷன் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் லோகேஷிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. ஒரு வேலை லோகேஷ் மன்சூர் அலிகானுக்கு காது குத்தி விடுவாரோ என்ற ஒரு எண்ணம் வருகிறது. இலவு காத்த கிளி போல் மன்சூர் அலிகான் காத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

ஏற்கனவே நிறைய பேட்டிகளில் ஏடாகூடமாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளும் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் டாப் நடிகர்களை குறி வைத்து பேசி இருந்தார். அதிலும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களால் நடிகர் சங்கம் துருப்பிடித்து கிடக்கிறது என பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

100 கோடி சம்பளம் வாங்குபவர்களில் விஜய்யும் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் அவரைப் பற்றியும் பேசி இருக்கிறாரா என்று தளபதி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அது மட்டுமல்ல லியோ படத்தில் விஜய் உடன் இணைந்திருக்கும் மன்சூர் அலிகான் மீது பல எதிர்ப்புகள் கிளம்புவதால் அந்த படத்தில் இருந்து அவரை தூக்கி விடலாம் என்ற முடிவிற்கு லோகேஷ் வந்துவிட்டார் போல் தெரிகிறது.

Also Read: ஒரு வழியா தளபதி தப்பிச்சிட்டாரு.. விஜய் 68 படத்தை இயக்கும் கலகலப்பான இயக்குனர்

Trending News