Lokesh Open Talk: தற்போதைக்கு டாப் நடிகர்களின் முதல் சாய்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். லியோ படத்திற்கு பின் தலைவர் 171 படத்தை இயக்கும் லோகேஷ் அதற்கான ஸ்கிரிப்ட் வேலையில் பிஸியாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியை மறுபடியும் ஆக்சன் ஹீரோவாக காட்டும் வகையில் லோகேஷ் ஸ்கிரிப்ட்டை தயார் செய்கிறார். இந்நிலையில் லோகேஷ், ‘லியோ படத்தில் மொத்தமா நான் செஞ்ச தப்பு இதுதான்’ என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சமீபத்திய பேட்டி தற்போது ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லியோ படத்தை பார்த்த பிறகு எல்சியு கான்செப்டில் உருவான படமா இப்படி இருக்குது என பலரும் விரக்தி அடைந்தனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் செகண்ட் ஆப் சொதப்பலாக அமைந்தது. இதற்கு காரணம் என்ன என்பதை இப்போது லோகேஷ் உடைத்துக் கூறியிருக்கிறார்.
Also Read: தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஏப்ரலில் படப்பிடிப்பை கன்ஃபார்ம் செய்த லோகேஷ்
லோகேஷ் செஞ்ச தப்பு
‘லியோ படத்தில் நடந்தது இனிமே நடக்காது, எல்லாமே என்னோட தவறு தான். ஒரு தரமான படம் உருவாக எப்படியும் ஒரு வருடமாவது எடுக்கும். ஆனால் லியோ படத்தை மட்டும் அந்த படத்தின் டைட்டில் வெளியிடும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டேன். இதுதான் லியோ படத்தில் நான் செஞ்ச மிகப்பெரிய தவறு.
ஆனால் இப்போது அந்த தவறை அடுத்த படங்களில் எதுலயுமே செய்யமாட்டேன். தன்னுடைய படத்திற்கு இனிமேல் முன்கூட்டியே ரிலீஸ் தேதியையும் அறிவிக்க மாட்டேன் என்று லோகேஷ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ‘அனுபவம் தான் சிறந்த ஆசான்’ அது லோகேஷுக்கு லியோ படத்தின் மூலம் நிறையவே கிடைத்துவிட்டது.
Also Read: வசூலில் தட்டி தடுமாறும் லோகேஷின் ஃபைட் கிளப்.. 3வது நாள் வசூல் ரிப்போர்ட்