திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என்னது லியோ இன்னும் போனியே ஆகலையா.? ஒதுங்கிய ரெட் ஜெயண்ட், பீதியில் இருக்கும் லோகேஷ்

Leo Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு பிறகு ரசிகர்கள் அடுத்து ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கும் படம் தான் தளபதி  விஜய்யின் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ  படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் ஆறாம் தேதி மலேசியாவில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: தம்பிகள் சீசனில் படையெடுக்கும் 5 ஹீரோக்கள் .. லியோவில் நடிப்பு அரக்கனின் தம்பியை களம் இறக்கும் லோகேஷ்

லியோ வரும் ஆயுத பூஜை அன்று அக்டோபர் 19க்கு வெளியாகிறது, வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் இன்னமும் தமிழகத்தில் போனியாகவில்லை என்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து மாநிலங்களும் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வியாபாரம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் வியாபாரம் ஆகாமல் இருந்து வருகிறது.

இதற்கு காரணம் சொந்தமாக வெளியிடலாம் என இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை 90 முதல் 100 கோடி வரை விலை வைத்துள்ளார். ஆனால் இப்பொழுது வரை இந்த படத்தை தமிழ்நாட்டில் படத்தை வாங்க போட்டி இருந்தாலும் இதுவரை வந்து யாரும் கேட்கவில்லை, முக்கியமாக கண்டுகொள்ளவே இல்லை.

Also Read: 99.9% உறுதி ஆயிடுச்சு.. சிஷ்யனுக்காக களமிறங்கிய கமல், லியோ செய்யப் போகும் சம்பவம்

விலை அதிகமாக இருப்பதால் கண்டு கொள்ளவில்லையா, இல்லை விஜய்யின் அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது. ஒருவேளை லியோ படத்தில் ஆடியோ லான்ச்சில் விஜய் என்ன அரசியல் பேசுகிறார் என்று பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் முடிவெடுக்கலாம் என ரெட் ஜெயண்ட் மூவிஸ் யோசிக்கிறதா என்று பேசப்படுகிறது.

உதயநிதி லியோ படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்ற வேண்டும் என்றால் அவருடைய சொந்த கட்சிக்கு எதிராக எந்த விஷயத்தையும் மலேசியாவில் விஜய் பேசாமல் இருந்தால் மட்டுமே அது நடக்கும். ஒரு வேலை விஜய் அதற்கு  மாறாக பேசிவிட்டால் நிச்சயம் லியோ படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று லோகேஷ் பீதியில் இருக்கிறார். 

Also Read: சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் ஃபாலோ பண்ணிய விஷயம்.. இரட்டை வேஷம் போடும் தளபதி

Trending News