கைதி பிரியாணி மாதிரி கூலி படத்துல சர்ப்ரைஸ் இருக்கா.? லோகேஷ் கொடுத்த அதிரடி அப்டேட்

Coolie-Lokesh: ரஜினி, லோகேஷ் கூட்டணியின் கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்திருப்பதால் படத்தின் வசூல் 1000 கோடியை தொடுமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்த படப்பிடிப்பை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு சென்று விட்டார். அடுத்த வருட சம்மர் ரிலீஸ் ஆக இப்படம் வரும் என தெரிகிறது.

இந்நிலையில் லோகேஷ் கூலி படம் பற்றிய ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் உங்க படம் எல்லாத்துலயும் சாப்பாட்டுக்கு ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும்.

லோகேஷ் கொடுத்த அதிரடி அப்டேட்

உதாரணத்துக்கு கைதி படத்தில் வரும் பிரியாணி சீன். அந்த மாதிரி கூலி படத்தில் தலைவருக்கு ஏதும் காட்சி இருக்கா என கேள்வி கேட்கப்பட்டது.

உடனே லோகேஷ் அதற்கு சிரித்தபடி இருக்கு என பதில் அளித்தார். அதேபோல் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் பழைய பட ரெஃபரன்ஸ் இருக்கா என்றும் கேட்கப்பட்டது.

ஏனென்றால் குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் இந்த யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார். படம் முழுவதையும் அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே எடுத்திருக்கிறார் என நேற்று வெளியான ட்ரெய்லரில் தெரிந்தது.

அதேபோல் கூலி படத்தில் ஏதும் சம்பவம் இருக்கா என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதற்கு லோகேஷ் சிறு சிறு இடங்களில் இதை நீங்கள் எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் தலைவரின் ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர். விரைவில் கூலி படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்