செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கமலுக்கு ரோலக்ஸ் மாறி ரஜினிக்கு லோகேஷ் கொண்டு வரும் நடிகர்.. சூப்பர் ஸ்டாருக்காக சல்லடை போட்டு சலிக்கும் லோகி

Thalaivar 171: லோகேஷ் இப்போது தலைவர் 171-ல் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் வெளிவந்த இதன் போஸ்டரே பயங்கர அலப்பறையாக இருந்தது.

அதைத்தொடர்ந்து விரைவில் டைட்டில் டீசரும் வெளியாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே படம் இந்த மாதிரியான கதையாக தான் இருக்கும் என்ற யூகங்களும் ஒரு பக்கம் கிளம்பி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் சூப்பர் ஸ்டாருக்காக ஒவ்வொரு நட்சத்திரங்களையும் சல்லடை போட்டு சலித்து வருகிறாராம். அதில் தற்போது யார் இப்படத்தின் வில்லன் என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கிடம் இதற்கான பேச்சுவார்த்தை சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அவர்தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

ரஜினிக்கு வில்லனாகும் ஹீரோ

ஏற்கனவே விக்ரம் படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக கமலுக்கு வில்லனாக சூர்யா நடித்திருந்தார். அந்த ரோலக்ஸ் கேரக்டர் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதை தூக்கி சாப்பிடும் வகையில் ரன்வீர் சிங்கின் கேரக்டர் இருக்குமாம். சொல்லப்போனால் கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக தான் அவருடைய கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அது நாம் யூகிக்க முடியாத வகையில் சர்ப்ரைஸை தர இருக்கிறது. இப்படியாக பெரும் எதிர்பார்ப்பை இப்போதே தலைவர் 171 மூலம் ஏற்படுத்தி விட்டார் லோகேஷ்.

Trending News