சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

யார் எப்படி போனாலும் வேலைய பாருங்க, ரஜினி போட்ட ஆர்டர்.. வாலை சுருட்டி செட்டியார் பொம்மையான லோகேஷ்

Director Lokesh: லோகேஷ் சூப்பர் ஸ்டாருடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கான அப்டேட்டை தான் அவர் தற்போது கொடுத்துள்ளார்.

அதன்படி தற்போது லோகேஷ், ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நேற்று வெளியான அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் இனிமேல் அவரை ஹீரோவாக பார்க்கலாம் என்று கூட ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் லோகேஷ் என் வழி இதுதான் என சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அதன்படி நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தலைவர் 171 ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக மட்டும் 4 முதல் 5 மாதங்கள் ஆனதாம்.

தலைவர் 171 அப்டேட்

அந்த அளவுக்கு தலைவருக்காக ஒரு தனித்துவமான கதை உருவாகி கொண்டிருக்கிறது. மேலும் இதன் சூட்டிங் கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது முடிந்த கையோடு கைதி 2 படத்தின் வேலைகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இது பற்றி அவர் கூறியிருந்தாலும் தலைவர் படத்திற்கு பிறகு ஆரம்பமாவது இன்ப அதிர்ச்சி தான்.

இதன் மூலம் லோகேஷ் அடுத்தடுத்த வேலைகளில் மும்முரமாகிவிட்டார். இதை அடுத்து இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ், விக்ரம் 3, லியோ 2 என பல படங்கள் லைனில் இருக்கிறது.

இதற்கு இடையில் அவர் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்த ஆல்பம் பாடல் மூலம் அவர் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

Trending News