ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் அப்பா சொன்னதை ஏளனமாக எடுத்துக் கொண்ட லோகேஷ்.. அதுதான் மொத்தமா வச்சு செஞ்சுட்டாங்க

Lokesh: ஒருவருடைய புகழ் நாலா பக்கமும் பரவ ஆரம்பித்து விட்டாலே அவர்களுடைய கால் தரையில் நிக்காது என்று சொல்வார்கள். அது லோகேஷ் விஷயத்தில் சரியாகவே பொருந்தி இருக்கிறது. எடுத்த படங்கள் குறைவாக இருந்தாலும் பேரும் புகழையும் அடைந்து விட்டதால் என்னமோ மற்றவர்கள் சொல்லும் நல்ல விஷயங்கள் கூட காதுக்கு எட்டாமல் போய்விடுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ படம் அதிக அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அதற்கு ஏற்ற மாதிரி முதல் பாதி நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி மொக்கையாக இருக்கிறது, சொதப்பி இருக்கிறது என்று பல விமர்சனங்கள் லியோ படத்திற்கு பலரும் கொடுத்தார்கள். அதற்கு காரணம் லாஜிக்கே இல்லாத பல விஷயங்கள் செகண்ட் ஆப்-பில் இருப்பதால்.

ஆனால் பிரிவியூ சோவாக ஐந்து நாள் முன்னாடியே லியோ படத்தை பார்த்த விஜய்யின் அப்பா லோகேஷ்-க்கு போன் பண்ணி இருக்கிறார். அப்பொழுது படம் ரொம்பவே சூப்பராக இருக்கிறது, படம் எப்படி பண்ண வேண்டும் என்று உங்களிடம் தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாராட்டி இருக்கிறார். இதையெல்லாம் காது கொடுத்து கேட்டு இருந்த லோகேஷ், அடுத்த விஜய் அப்பா சொன்னதை ஏளனமாக எடுத்துக் கொண்டார்.

Also read: அக்கட தேசத்தில் ஆதிக்கம் செய்யும் 5 நடிகர்கள்.. மார்க்கெட்டை எகிற வைத்து டாப்பில் ஜொலிக்கும் விஜய்

அதாவது எஸ்ஏ சந்திரசேகர், சார் கொஞ்சம் செகண்ட் ஆஃப் மட்டும் சரியில்லை. அது எப்படி ஒரு அப்பா தன்னுடைய மகளை ஒரு மதத்தில் உள்ள மூடநம்பிக்கையால் வெட்டுவது நல்லா இல்லை. அதை மாற்றினால் படம் வேற லெவல்ல ஹிட் ஆகிவிடும் என்று லோகேஷ் இடம் சொல்லி இருக்கிறார். உடனே லோகி நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார்.

அதற்கு முன் பாராட்டிய பொழுது எதுவும் சொல்லாத லோகேஷ் ஒரு குறையை மட்டும் சொல்லும்போது காது கொடுத்து கேட்க தயாராக இல்லை என்று விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தற்போது நடந்த விஷயத்தை கூறி வருகிறார். அதற்கேற்ற மாதிரி படம் வெளிவந்த பிறகு மொத்தமாக எல்லோரும் வச்சு செஞ்சுட்டாங்க. இப்ப இருக்கிற இயக்குனர்கள் யாரும் ஒரு தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் தான் இருக்கிறார்கள் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

Also read: விஜய் அரசியலுக்கு வந்தால் நான் என்ன பதுங்கிகொள்ளணுமா? தளபதியை தன் பாணியில் வெளுத்து விட்ட லியோ பட வில்லன்

Trending News