வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லோகேஷ் யுனிவர்சில், ரோலக்சை விட கொடூரமான வில்லன் இவர்தான்.. லோகி வெர்ஷன் 2.0 வைரலாகும் வீடியோ

Lokesh in 2.0 Version: சினிமா ஆரம்பித்து எத்தனையோ வருடங்களை தாண்டிய நிலையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உள்ளே நுழைந்து நடிகர்களிடமும், மக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் சம்பந்தப்படுத்தி அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் இதுவரை இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களில் விட்ட குறை தொட்ட குறையாக பல காட்சிகளையும், நடிகர்களையும் புரியாத புதிராக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தில் உள்ள டில்லி கேரக்டரையும் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தையும் ஆங்காங்கே கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இதில் துருப்பு சீட்டாக விட்டுட்டு போன எல்லா சீன்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வரும் படமாக லோகி வெர்ஷன் 2.0 என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக ராக்ஸ்டார் அனிருத் உருவாக்கின வீடியோவாக இருந்தாலும் பார்த்ததுமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு புல்லரித்து போகிறது.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ். அடுத்தபடியாக விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தான் இருப்பதிலேயே முக்கியமான கொடூர வில்லன் என்று அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது என்னவென்றால் இவரை விட மிகக் கொடூரமான ஒரு வில்லன் இருக்கிறார் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனாக இருக்கப் போவது யார் என்றால் லியோ தாஸ். சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதைப் போல ரோலக்சை விட லியோ கேரக்டர் இன்னும் வலுவாக அமையப்போகிறது. இதற்கிடையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் பொதுவாக நான் எடுக்கக் கூடிய எந்த படத்திலும் பிளாஷ்பேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் சும்மா கற்பனை கதையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் இதுக்கு ஒரு செக் வைக்க போகிறார். ஆக மொத்தத்தில் லோகியின் 2.0 வெர்ஷன் படத்தில் இன்னும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கப்போகிறது.

Trending News