புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்தது. அந்த படத்திற்கு பிறகு லோகேஷ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குகிறார். விக்ரம் படத்தை போலவே இந்த படத்தையும் பயங்கர கேங்ஸ்டர் படமாக உருவாக்குவதால் லோகேஷின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மட்டுமல்ல தளபதி 67 படத்தை வைத்து விக்ரமை விட ஜாஸ்தியாக லாபம் பார்க்க வேண்டும் என லோகேஷ் திட்டம் போட்டு இருக்கிறார். இதன் மூலம் அவருடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார். இதற்காகவே அவர் செம பிளான் போட்டிருக்கிறார்.

Also Read: தளபதி-67 பூஜையில் விஜய்யுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தை யார் தெரியுமா.? பிரபல காமெடியன் மகளாம்

லோகேஷ் தளபதி 67 ஷூட்டிங் ஆரம்பித்து விட்டார். விஜய் உடன் லோகேஷ் இணைவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே இவர்கள் காம்போ மாஸ்டர் படத்தில் நன்றாக அமைந்தது. படத்திற்கும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தளபதி 67 எப்படியாவது விக்ரம் படத்தின் அளவு பிசினஸ் செய்து விட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் படத்தின் பிசினஸை விட இது அதிகமாக வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். அவருடைய கனவே தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதுதான்.

Also Read: ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டரில் இருக்கும் ரகசியம்.. சோசியல் மீடியாவை கலக்கும் தளபதி 67 டைட்டில்

அதனால் இந்த படத்தையும் அந்த அளவுக்கு எதிர்பார்க்கலாம் என்கிறார். அதற்கேற்றார் போல் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதுவரை எந்த ஹீரோவின் படத்திற்கும் இல்லாத அளவுக்கு தளபதி 67 பட ஆடியோ ரைட்ஸ் அதிக விலைக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

தளபதி 67 திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் பல கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் ஆடியோ உரிமை விற்பனையாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிரீ பிசினஸ் வியாபாரமே பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த செய்தியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் தளபதி 67 படத்திற்கு பிறகு லோகேஷ் தயாரிப்பாளராக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read: ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

Trending News