புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இவரை மாதிரி ஒரு ஆளு தான் தயாரிப்பாளருக்கு தேவை..படம் ரிலீசுக்கு முன்னாடியே லாபத்தை கொடுக்கும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் காஷ்மீரில் சூட்டிங் மிக மும்பரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இப்படத்தின் படப் குழுவினர், ஆரம்பித்த முதல் நாளில் இருந்து பரபரப்பாக வேலை பார்த்து வந்ததால் இப்பொழுது 50% மேல் படப்பிடிப்பு முடிய உள்ளது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் லோகேஷிடம், தயாரிப்பாளர் காஷ்மீரில் சூட்டிங் எத்தனை நாள் நடைபெறும் மற்றும் எப்பொழுது முடிப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு இவர் மார்ச் 25ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடியும் என்று கூறியிருக்கிறார். பின்பு தயாரிப்பாளரும் அதற்கு ஏற்ற மாதிரி பட்ஜெட்டை ஒதுக்கி இருந்தார்.

Also read: லோகேஷ் நண்பரால் சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.. இப்படி SK-வை அசிங்கப்படுத்த என்ன காரணம்!

ஆனால் லோகேஷ், தயாரிப்பாளரிடம் சொன்ன தேதிக்கு முன்னதாகவே அதாவது மார்ச் 23ஆம் தேதிக்குள் காஷ்மீரில் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற படப்பிடிப்பு முடித்து விடுவாராம். இதை கேட்ட தயாரிப்பாளருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் பொதுவாக இயக்குனர்கள் குறிப்பிட்ட தேதியிலிருந்து அதிகமான நாட்களை தான் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் லோகேஷ் சற்றும் வித்தியாசமாக படப்பிடிப்பை சீக்கிரம் முடித்ததால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு காரணம் ஒரு நாள், இரண்டு நாள் என்றாலும் சீக்கிரமாக படப்பிடிப்பு முடிந்தால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட் ரீதியாக சம்பளம் அனைத்தும் குறைந்து விடும். அந்த இரண்டு நாள் வருகிற செலவுகள் அனைத்தும் மிச்சமாகப்படுகிறது.

Also read: தோல்வியை பார்க்காத 5 தமிழ் இயக்குனர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்த லோகேஷ்

இந்த மாதிரியான ஒரு பிரம்மாண்ட இயக்குனர் தயாரிப்பு செலவை குறைத்து படம் எடுக்கும் இயக்குனர் என்றால் அது தமிழ் சினிமாவில் லோகேஷால் மட்டும் தான் முடியும். அத்துடன் இவர் இப்படி இருப்பதால் தயாரிப்பாளருக்கு மட்டும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இல்லை விஜய்யின் ரசிகர்களுக்கும் இது ஒரு விதமான சந்தோசத்தை கொடுக்கும்.

ஏனென்றால் இவர் இந்த மாதிரி சீக்கிரமாக படபிடிப்பை முடித்தால் இது குறித்து வரும் அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் தேதிகள் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாக அமையும். இந்த மாதிரி ஒரு இயக்குனர் இத்தனை நாள் எங்க தான் இருந்தார், இவரை மாதிரி ஒரு ஆள் தான்  தயாரிப்பாளருக்கு  தேவை என்று பெயர் வாங்கி வருகிறார்.

Also read: லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ்.. லோகேஷ்க்கு ட்ரீட் கொடுத்த புகைப்படம்

Trending News