திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67 கதையை செதுக்கி வைத்திருக்கும் லோகேஷ்.. ஆங்கில பட தழுவலாக இருந்தாலும் வேற லெவல்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்தில் அரிய வகை கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது தவிர தளபதி 67 படத்தில் எக்கச்சக்க வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இப்போது தளபதி 67 படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் 50 வயதிற்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதில் விஜய்யின் மனைவியாக திரிஷாவும், மகளாக பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஜனனியும் நடிக்கிறார்கள். படத்தில் விஜய் ஒரு ரெஸ்டாரன்ட் வைத்துள்ளார்.

Also Read : தில் ராஜுவை நம்பி மோசம் போன விஜய்.. வைரலாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு

அந்த ஹோட்டலில் விஜய் கூடவே பயணிக்க கூடியவர்தான் மிஸ்கின். இதில் ஒரு கட்டத்தில் ஹோட்டலுக்கு வரும் ரவுடிகளால் விஜய்யின் மகளுக்கு உடல் ரீதியான தொந்தரவு ஏற்படுகிறது. இதை அறிந்த விஜய், மிடில் கிளாசில் உள்ள அவர் இதுபோன்ற ரவுடி குரூப்பை எப்படி கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை.

இதற்காக அவர் என்னென்ன முயற்சி எடுக்கிறார், எப்படி அந்த ரவுடி குரூப்பை கண்டு பிடித்த சண்டையிட்ட வெற்றி கொள்கிறார் என்பது தான் தளபதி 67 படத்தின் மொத்த கதையாம். இதைக் கேட்பதற்கு ஆங்கில பட தழுவுகளாக இருந்தாலும் விஜய்காக கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளார்.

Also Read : எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா.? மேடையில் விஜய்யை கிழித்த பயில்வான்

அதிலும் விஜய்யின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமாம். ஏனென்றால் அவருடைய கதாபாத்திரத்தை லோகேஷ் செதுக்கி வைத்துள்ளாராம். மேலும் தளபதி 67 படத்தில் கண்டிப்பாக சமூக கருத்து இடம்பெறும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தற்போது பெரும்பாலான பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனையை தளபதி 67 படத்தில் லோகேஷ் கையில் எடுத்துள்ளார். இப்போது தளபதி 67 படத்திற்காக விஜய் தனது கெட்டப்பை மெருகேற்றி வருகிறார். மேலும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்று லோகேஷ் தரப்பில் இருந்த கூறப்படுகிறது.

Also Read : கண்ணை கூச வைக்கும் கிளாமரில் விஜய்யின் அண்ணன் மகள் ரியா.. பட வாய்ப்புக்காக இறங்கிய 18 வயசு அம்மணி

Trending News