வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கைதி படத்தையும், லியோவையும் கோர்த்துவிட்ட லோகேஷ்.. பிக் பாஸ் போட்டியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Leo Story: இப்போதைக்கு அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கும் படம் என்றால் அது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் தான். அந்த வகையில் இப்படம் வருகிற 19ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதிக எக்ஸ்பெக்டேஷன் வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 5 காட்சி. அதில் காலை 4 மணி மற்றும் 9 மணி காட்சிகளுக்கு போராடி அனுமதியை தயாரிப்பாளர் வாங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தின் கதை மொத்தமும் லீக் ஆகிவிட்டது. அந்த வகையில் கைதி படத்தையும் லியோ படத்தின் கதையும் ஒன்றாக கோர்த்து விட்டிருக்கிறார் லோகேஷ்.

இதில் முக்காவாசி கைதி படத்தின் கதைகளை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது கைதி படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற கேரக்டரை நரேன் நடித்திருப்பார். அந்த வகையில் இவருடைய பொண்ணு தான் பிக் பாஸ் சீசன் 6ல் பங்கு பெற்ற போட்டியாளர் ஜனனி. இந்தப் பொண்ணு எந்த ஸ்கூல்ல படிக்குது என்றால் பார்த்தியோட பையனுடைய ஸ்கூல்ல படிக்குது. பார்த்தி யார் என்றால் அப்பாவாக நடிக்கும் விஜய்.

அத்துடன் இதே ஸ்கூல்ல தான் கைதி படத்துல டில்லி பொண்ண நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன் சொன்னது இங்கதான். ஆக மொத்தத்தில் இவர்கள் அனைவரையும் ஒரே ஸ்கூல்ல கூட்டிட்டு வராரு. இதற்கடுத்து கைதி படத்தில் நடித்த அன்பு, அடைக்கலம், நெப்போலியன் என்ற கேரக்டரையும் உள்ளே வைத்திருக்கிறார்.

மேலும் லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் கைதிக்கு முன்னாடி என்ன நடந்தது என்ற கதையை கொண்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கைதி படத்தின் ஃப்ளாஷ்பேக் முடிந்த பிறகு பார்த்தியின் கதையை வைத்து நகர்கிறது. அந்த வகையில் இப்படம் எல்லா படத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட எல்சியு கதையாகத்தான் இருக்கிறது.

அதன் பிறகு இதில் பிஜாய் குடும்பத்தை அடைக்கலத்தின் கேங் சோழிய முடிச்சிடுறாங்க. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை லியோ படத்தில் கொண்டு வருகிறார்கள். மேலும் இதில் விக்ரம் படத்தையும் கொண்டு வருகிறார்கள். எப்படி என்றால் விக்ரமுக்கு முன்னாடி நடந்த கதையாக தான் லியோ படம் வருகிறது. எப்படியோ மொத்தமா சேர்த்து ஒரு கலவையாக லியோ படத்தை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இது வெற்றி பெருகிறதா, வசூலில் லாபத்தை அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News