Lokesh will cast Rajini in the story told to Kamal: தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக திகழும் ரஜினி, தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் இவரது கேரியரை காலி செய்வது போல் வந்த விமர்சனங்களால் சற்று நிலை குலைந்து தான் போனார்.
மீண்டும் தன்னை நிரூபிக்கும் விதமாக கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படத்தில் தரமான வெற்றியை பதிவு செய்து பன்மடங்கு பலத்துடன் உயர்ந்தார்.
தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படத்தில் சமூக அக்கறையோடு தனித்துவமான கதையில் நடித்து வருகிறார் தலைவர்.
இதன் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் தனது அடுத்த படமான தலைவர் 171க்கு லோகேஷ் உடன் ஒப்பந்தமானார் சூப்பர் ஸ்டார்.
வன்முறைச் சத்தங்கள் காதை பிளக்க ஆச்சரியப்படுத்தும் ஆக்சன் காட்சிகளுடன் எப்போதுமே வெற்றியை தன் வசம் வைத்திருக்கும் லோகேஷ் உடன் சூப்பர் ஸ்டார் இணைவது தமிழ் சினிமாவையே கொண்டாட வைத்தது.
சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து மிரண்டு போயினர் ரசிகர்கள்.
வாட்ச் கடை ஓனர் கேரக்டரில் கேங்ஸ்டர் ஆக வரும் தலைவர்
வாட்ச்சை சங்கிலி போல் பிணைத்து பேக்ரவுண்டில் காலச்சக்கரம் சுழல்வது போல் இருந்த இந்த போஸ்டரை பார்த்து பலரும் பலவாறு கதை கட்டி விட்டார்கள்.
தற்போது மார்க் ஆண்டனி போன்று டைம் டிராவல் கதை வெற்றி பெறுவதால் தலைவர் அதேபோல் டைம் டிராவல் கதையில் நடிக்கிறார் என்று கொளுத்தி போட்டார்கள்.
உண்மையில் இது விக்ரம் படத்தில் கமலுக்கு சொன்ன கதையாம். இதில் கமலை மொபைல் ரீசார்ஜ் ஷாப் நடத்துபவர் போல் கதை சொல்ல உலக நாயகன் அதை கட் செய்து அவருக்கு தகுந்தார் போல் மாற்றி விட்டாராம்.
அதே கதையை தலைவரிடம் கூறி மொபைல் ஷாப்புக்கு பதிலாக வாட்ச் ஷாப் ஆக மாற்றிவிட்டார் லோகி.
இதுவரை பார்க்காத தலைவரை பார்க்கலாம் என்று சூசகமாக கூறியுள்ள லோகேஷ், தலைவரை என்ன செய்யப் போகிறார் என்று தான் தெரியவில்லை.
கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலுக்கு ரெடியாகிறது தலைவர்171 அது மட்டும் உண்மை.
ஏப்ரல் 22 அன்று தலைப்பை வெளியிட்டு விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவித்து உள்ளார் லோகேஷ்.