ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் டாப் நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரே ரோல் மாடல் என்றால் அது சூப்பர் ஸ்டார் மட்டும்தான். இப்படி தன்னுடைய நடை, ஸ்டைல், பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டும் ரஜினியின் படங்களுக்கு இப்போதும் தமிழ் சினிமாவில் டிமாண்ட் அதிகமாக தான் இருக்கிறது.

அந்த வகையில் இவருடைய படங்களின் பெயர்களை வைப்பதிலிருந்து பாடல்களை ரீமேக் செய்வது வரை பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் இவர் நடித்த ஒரு திரைப்படத்தை விஜய் ,அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் மிகப்பெரும் ஆசையாக இருக்கிறது. தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் அவர் தன்னுடைய இந்த ஆசையை ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: ரஜினி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்கள்.. 90களில் வானவராயனாய் பல பெண்களைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார்

அதில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளிவந்த தளபதி திரைப்படத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் சூர்யா, தேவா என்ற அந்த கதாபாத்திரங்களுக்கு விஜய், அஜித் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் அவர்களை தவிர வேறு யாராலும் அதில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதில் நடிக்க அவர்கள் மட்டும் சம்மதித்தால் நிச்சயம் அது சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார். ஒரு வகையில் இது பேராசையாக இருந்தாலும் இது நடந்தால் நிச்சயம் அது மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இரு பெரும் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also read: அஜித் போலவே 80களில் இருந்த நடிகர்.. இரண்டு பேருக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

அதனாலேயே சில பல சண்டைகளும் சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகிறது. மேலும் தொழில் போட்டியின் காரணமாக இந்த இரு நடிகர்களும் தற்போது எதிரெதிர் துருவங்களாக மாறி இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் லோகேஷ் கனகராஜின் இந்த கனவு எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

ஆனாலும் மிகப் பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆனால் நிச்சயம் அது பாக்ஸ் ஆபிஸையே மிரளவிடும். அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கும் லோகேஷ் இதை சாதித்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் ரஜினி போன்ற பெரிய நடிகர்களே இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு இவர் தற்போது மிகப்பெரும் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

Also read: சம்பளத்திற்கு பதில் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்.. யாரும் செய்யாததை செய்து காட்டிய ரஜினி

Trending News