வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

மாஸ்டர் பட பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ படம். நட்சத்திர பட்டாளமே சங்கமித்து உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. லியோ படத்தில் 6, 7 வில்லன்கள் என லோகேஷ் பயமுறுத்தி உள்ளார்.

ஏனென்றால் கைதி, மாஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. விக்ரம் படத்தில் அதை பூர்த்தி செய்வாரா என எதிர்பார்த்த நிலையில் அதையும் மீறி ஏதோ செய்து ரசிகர்களை திக்கு முக்காட செய்து விட்டார்.

Also Read : உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

இதனால் லியோ படத்தில் என்ன செய்யப் போகிறார் என்று நாம் எதிர்பார்ப்பதை விட கண்டிப்பாக வேறு விதமாக சம்பவம் செய்திருப்பார். ஆகையால் இப்படத்தை வாங்க வேண்டும் என முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டே இருந்தனர். மேலும் ப்ளடி ஸ்வீட் லியோ என்ற டைட்டிலுகாகவே இப்போது பல நூறு கோடி கல்லா கட்டி உள்ளது.

அதாவது லியோ படம் 400 கோடியை தாண்டி ஃப்ரீ ரிலீஸ் செய்துள்ளது. கோலிவுட்ல அதிக ஃப்ரீ ரிலீஸ் செய்த படம் இதுதான். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெட்வொர்க்கும், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. மேலும் தியேட்டர் ரைட்ஸ் 175 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

Also Read : கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் மியூசிக் ஆகியவை 240 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ரிலீசுக்கு முன்பே இவ்வளவு லாபம் பார்த்த நிலையில் படம் வெளியாகி கோடிகளை குவிக்க காத்திருக்கிறது. அதன்படி இப்படம் இந்திய அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக லியோ படம் வெளியாகி பதான் படத்தின் வசூலை முறியடிக்க காத்திருக்கிறது. மேலும் இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.

Also Read : லியோவை ஓவர் டேக் செய்ய போட்ட பிளான்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஏகே 62

Trending News