வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அட்லீ மாதிரி வசமாக சிக்கிய லோகேஷ்.. நெல்சனை காப்பாற்றியது போல ரஜினி காப்பாற்றுவாரா.?

Rajini will save Lokesh like Nelson: லோகேஷ் கனகராஜ் என்று பெயர் சொன்னதும் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு வேகமாக வளர்ந்தார். வேக, வேகமாக எல்லா மாநிலங்களின் ஹீரோக்களும் எங்களுக்கு படம் பண்ணுங்கள் என லோகேஷிடம் வரிசையில் நின்றனர். அவசரப்படாதீங்க எல்லாருக்கும் நான் படம் பண்ணுவேன் என சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார் லோகேஷ்.

லியோ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்தது அதுவே அவருக்கு ஆபத்தாகவும் மாறிப்போனது. படம் ஆங்கில படத்தின் தழுவல் என கூறப்பட்டது. கடைசியில் அதை அவர்களுக்கே தெரியாமல் திருடி எடுத்து விட்டார். என்று தகவல் தற்போது வெளி வந்து கொண்டிருக்கிறது. அதையும் முழுவதும் ஒழுங்காக எடுக்காமல் அரைகுறையுமாக லியோ படத்தில் பயன்படுத்தி எடுத்து விட்டார். இதனால் படத்தை பார்க்க கூட முடியவில்லை என கடுப்பாகி உள்ளனர் ரசிகர்கள்.

இப்போது லோகேஷ் நிலைமையை பார்த்தால் பீஸ்ட் படம் தோல்வியில் நெல்சன் எவ்வளவு அவமானப்பட்டு காணாமல் போனாரோ. அதே அளவிற்கு லோகேஷ் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறார். நெல்சன் கூட படம் சரியில்லை என்று சொல்லிவிட்டனர். இவருக்கு காப்பி அடித்து படத்தை எடுக்கிறார் என்ற பெயர் வந்தது யாரும் எதிர்பார்க்கவில்லை. நெல்சனை தக்க சமயத்தில் ரஜினி பலமுறை யோசித்து அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பை வழங்கி காப்பாற்றி தற்பொழுது நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறார்.

ரஜினி இன்னும் லோகேஷ் படத்தை பற்றி பேசாமல் அவர் தற்பொழுது வேறு படத்தில் பிஸியாக இருக்கிறார். லோகேஷ் இதை பயன்படுத்தி வேக வேகமாக கதை மற்றும் திரைக்கதையை சரி செய்ய வேண்டும். காரணம் ரஜினி வந்ததும் சும்மா விட மாட்டார். நெல்சனை எந்த அளவிற்கு தயார் செய்தாரோ அதைவிட அதிகமாகவே லோகேஷுக்கு மெனக்கிடுவார். இன்னும் நிறைய லோகேஷ்க்கு நேரம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் எவ்வளவு நாவல்கள் இருக்கிறது. அந்த நாவல்களை கண்டறிந்து அதில் உள்ள சில முக்கியமான தகவல்களை படமாக எடுத்து அதில் விஜய் மற்ற பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்தால் அந்த நாவல்களும் வெற்றி அடையும் படமும் வெற்றி அடையும் திருட்டு பட்டமும் நமக்கு கிடைக்காது. எதற்காக ஏதோ ஒரு மொழியில் யாருக்கோ தெரியாமல் அந்த படத்தை திருடி இப்படி அசிங்கப்பட வேண்டும்.

லோகேஷ் ஒரு தோல்வி தேவைப்படும் கண்டிப்பாக எனக்கு வரும் என கூறிக் கொண்டே இருந்தார் அது இந்த லியோ படமாக அமைந்துவிட்டது. விஜயினால் மட்டுமே இந்த படம் தற்பொழுது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் லோகேஷ் என்ற இயக்குனரை காணாமல் செய்திருப்பார்கள். இதிலிருந்து கதையை திருடாமல் சொந்த சிந்தனையை பயன்படுத்தி லோகேஷ் படம் எடுக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகிறார்கள். ரஜினி எப்படி இவரை பயன்படுத்த போகிறார் என்று போக போக தெரியும்.

Trending News