முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்து அஜித்தை மோசமாய் விமர்சித்து வந்துள்ளார். இருந்தபோதிலும் அடிக்கடி அஜித்தை அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தும் வருபவர் அவர் . ஒருமுறை அஜித்தின் ஆண்மையைப் பற்றி கூட விமர்சனம் செய்தவர் அந்த பத்திரிகையாளர்.
அஜித்தை அவருடைய அலுவலகத்தில் அந்த பத்திரிக்கையாளர் பார்க்க சென்ற தினம் அன்று. வழக்கம்போல் அவருக்கு செய்யும் உபசரணங்களை அலுவலகத்தில் கொடுத்தனர். அஜித்தை சந்தித்த பின் அவர் அவசரமாய் கிளம்ப முயற்சித்துள்ளார். இவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறீர்கள் என அஜித் கேட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர், தனக்கு ஹார்ட் பிராப்ளம் இருப்பதாகவும். இன்று மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் இருக்கிறது எனவும் அஜித்திடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மருத்துவரை நன்கு அறிந்திருந்த அஜித் அவருக்கு போன் செய்து விஷயத்தை கேட்டு ஆபரேஷனுக்கு நாள் குறிக்குமாறு கூறியுள்ளார்.
ஆபரேஷன் பண்ணிய பிறகு அந்த பில்லை தனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டாராம். அதற்குண்டான ஒன்றரை லட்ச ரூபாயையும் அஜித் தான் மருத்துவமனைக்கு கட்டி இருக்கிறார். அந்த பத்திரிகையாளர் எவ்வளவோ மறுத்தும் கூட அஜித் கேட்கவில்லையாம்.
அது மட்டும் இன்றி ஆபரேஷன் முடிந்ததும் அவர் வீட்டுக்கு சென்று ஆறு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களையும், பணத்தையும் கொடுத்து உதவி செய்துள்ளார். இப்படி மனதால் பல நல்ல விஷயங்களை செய்த அஜித்தை இன்று கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்