விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் லாஸ்லியா. இவருடைய தமிழ் உச்சரிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்ட லாஸ்லியா தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பன் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதில் லாஸ்லியா, பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அஸ்வின் உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் லாஸ்லியா நடித்துள்ளார்.
இந்தப் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் தற்போது லாஸ்லியா பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்ற போது கவின்னை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது.
பின்பு அதன் பிறகு இவர்கள் இருவருமே இதைபற்றி மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்தனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் லாஸ்லியா தன்னுடைய பழைய காதல்களை நினைவு கூர்ந்துள்ளார். முதலில் பள்ளி படிக்கும் போது தான் தனக்கு முதல் காதல் வந்தது எனக் கூறியிருந்தார்.
ஆனால் அது ஒன் சைட் காதல் எனவும் அந்த பையனுக்கு தற்போது திருமணம் ஆகி குழந்தைகளே உள்ளது எனவும் கூறியிருந்தார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது தான் எனக்கு முதல் முத்தம் கிடைத்தது என லாஸ்லியா கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் சிலர் அது கவின் ஆக தான் இருக்குமோ என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அந்தப் பையனின் பெயரை லாஸ்லியா கடைசி வரை சொல்லவே இல்லை.