வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

திரும்பிய பக்கமெல்லாம் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. இவருக்கு தான் எவ்வளவு சோதனை

விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் தற்போது சினிமாவில் மட்டுமே தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அதற்காக அவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். விரைவில் இவர் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு ஓரளவு எழுந்து வந்தாலும் அவருக்கு தொடர்ந்து பல சங்கடங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. குறிப்பாக ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் அடிமேல் அடி வாங்கியது. இதனால் தனுஷ் அடுத்ததாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க அவருடைய மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது. தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடித்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அதில் அவர்கள் இருவரின் நடனம் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனது.

மேலும் தனுஷின் யூடியூப் தளத்தில் அந்த பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைப்பது. இதுவரை வேறு எந்த பாடலும் இப்படி ஒரு சாதனையை படைத்தது கிடையாது. ஆனால் தற்போது அந்த பாடலை யாரோ சில விஷமிகள் ஹேக் செய்து விட்டனர்.

இதனால் தனுஷ் தரப்பு பெரிய ஆபத்தில் இருக்கிறது. பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்த அந்த பாடல் மிகப் பெரிய அளவில் பணத்தையும் தனுசுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து பல படங்கள் எடுக்கலாம். அப்படி ஒரு புகழ் பெற்ற பாடல் தற்போது யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் பதறிப்போன தனுஷின் தரப்பு தற்போது அந்த பிரச்சனையை சரிசெய்து விட்டது. இப்படி அடிமேல் அடிவாங்கும் தனுஷின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவருடைய விவாகரத்து அறிவிப்புக்குப் பின் தான் இப்படி பல சோதனைகள் அவருக்கு வருவதாக பலரும் கூறுகின்றனர்.

சினிமா வாழ்க்கையில் விவாகரத்து முடிவுக்கு வந்த எந்த நடிகருக்கும் அதன்பின் சினிமா வாழ்க்கை உருப்படியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அதைப்போல் தனுஷுக்கும் ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தனுஷின் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது.

Trending News