வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிக் பாஸ் காதலால் சினிமா கேரியரே போச்சு.. நொந்து போய் பேசிய விஜய் சேதுபதி பட பொண்டாட்டி

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலமாகலாம் என பலரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு சீரியலில் நடித்ததன் மூலம் நடிகை ஷிவானிக்கு கிடைத்தது. இதில் ஷிவானி, பாலாஜி முருகதாஸை உருகி உருகி காதலித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றிய புகைப்படமும் இணையத்தில் வெளியானது.

ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் தோன்றுகிறது. ஏனென்றால் தனித்தனியாகவே தான் புகைப்படங்களை பதிவிடுகின்றனர். ஷிவானிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இப்போது அவர் வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்ட அம்மணி அபிராமி.. எங்க போச்சு உங்க ‘நோ மீன்ஸ் நோ’

இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதலால்தான் தன்னுடைய சினிமா கேரியரே போச்சு என நொந்து போய் பேசி உள்ளார். ஷிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். இதில் இவருடைய குறும்புத்தனமான சேட்டைகள் இளசுகளை வெகுவாகக் கவர்ந்தது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில சினிமா பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதிலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராகவும் நடித்து கலக்கியிருப்பார். பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இளசுகளை திணறடித்தார். மேலும் பம்பர் படத்திலும் ஹீரோயின் ஆகவே நடித்துள்ளார்.

Also Read: காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

மேலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சின்னத்திரையில் இருக்கும் போது எளிதாக வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் சினிமாவில் அவ்வளவு எளிதாக தன்னை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாக பேசினார்.

அது மட்டுமல்ல சினிமாவில் தனக்கு எந்தவித பேக்ரவுண்டும் இல்லாததும், இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் காதல் தான் சினிமா கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தியதா? என கேட்டதற்கு ‘ஆமாம்’ என்றும் சட்டென பதில் அளித்தார். உடனே அடுத்த நிமிடமே சினிமா மீதான காதல் தான் தன்னுடைய கேரியரை துவங்கி வைத்ததாக மழுப்பலான பதில் அளித்தார். ஒருவேளை காதலர்களாக இருந்த ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவருக்கும் பிரேக்கப் ஆனதை மனதில் வைத்துத்தான் இப்படி எல்லாம் நொந்து பேசி இருக்கிறார்.

Also Read: மீண்டும் டார்ச் லைட் போல பட வாய்ப்பு தேடும் ரித்விகா.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

Trending News