இயக்குனர் பிரதீப், இன்றைய இளைஞர்களின் சென்சேஷனல் ஹீரோ. தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவர் ஹீரோ, இரண்டு படங்களின் இயக்குனர் என்பது மட்டும் தான் நம்மில் பலருக்கும் தெரியும். சினிமாவை மட்டுமே கனவாக கொண்ட பல இளைஞர்களுக்கு பிரதீப் ரோல் மாடலாகவும் இருக்கிறார்.
லவ் டுடே படத்திற்கு பிறகு யார் இந்த பிரதீப் என்று சினிமா ரசிகர்கள் தேடும் பொழுது தான் இவர் சினிமாவை எப்படி நேசித்து இருக்கிறார், அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. பிரதீப் முதலில் குறும்படங்களை இயக்கி கொண்டிருந்தார். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி இன்று கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார்.
Also Read: ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆனா உதயநிதி!
இவருடைய முதல் படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 15 வருடத்தில் சமூகம் எப்படி மாறியிருக்கிறது, முன்னேறி இருக்கிறது என அப்படியே திரையில் காட்டியிருந்தார். கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக ஆனது. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி வசூலை அள்ளியது.
இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் பிரதீப்புக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாம். ஆனால் பிரதீப் அந்த காரை வாங்க மறுத்து விட்டாராம். தன்னால் அந்த காருக்கு பெட்ரோல் போட்டு உபயோகிக்க முடியாது என்றும் அந்த காருக்கு சமமான பணத்தை கொடுத்தால் அடுத்த படம் எடுக்கும் வரை தனக்கு பொருளாதார ரீதியாக உதவும் என்றும் சொல்லி பணத்தை வாங்கி கொண்டாராம்.
இதே போன்று முந்தைய பேட்டியில் அவர் வேலையை ராஜினாமா செய்யும் போது வாங்கிய செட்டில்மென்ட் பணத்தை கோமாளி படம் இயக்கும் வரை சிறுக சிறுக செலவு செய்ததாக கூறியிருந்தார். சினிமாவில் வெற்றியடைய காத்திருக்கும் பல இளைஞர்களுக்கு இவருடைய அனுபவங்கள் எல்லாம் ஒரு பெரிய பாடமாகவே இருக்கிறது என்றே சொல்லலாம்.
பிரதீப் மேம்போக்காக ரசிகர்களை சிரிக்க வைக்க கதை சொல்லுபவர் மட்டுமல்ல. தன்னுடைய ஒவ்வொரு படத்தின் கிளைமேக்சிலும் சிந்திக்கவும் வைக்கிறார். உண்மையான உழைப்பு என்றுமே ஜெயிக்கும் என்பதை நடத்தி காட்டியிருக்கிறார். 51/2 கோடியில் உருவான லவ் டுடே படம் ரிலீஸ் ஆன இரண்டு வாரத்திலேயே 50 கோடி வசூலை தாண்டி விட்டது.
Also Read: தவறான கண்ணோட்டத்தில் வெளிவந்த லவ் டுடே விமர்சனம்.. அதுக்கு செல்வராகவனை இழுத்து இருக்க வேண்டாம்