வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் லவ் டுடே திரைப்படம் வசூலிலும் பல சாதனை புரிந்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி பத்து நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையை அதிகம் கவர்ந்துள்ளது.

இப்போதைய காலகட்டத்தில் இருக்கும் அவலங்களையும், சில தவறான விஷயங்களையும் இந்த திரைப்படம் காட்டியிருந்தாலும் அது சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை சொல்லும் படி இருப்பதாலேயே இப்படம் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சோசியல் மீடியாக்கள் அதிகம் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் சிறு பிள்ளைகள் கூட பல செயலிகளை ரொம்பவும் அசால்ட்டாக பயன்படுத்தி வருகின்றனர்.

Also read: வெறும் 10 நாளில் இவ்வளவு கோடி வசூலா? கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த லவ் டுடே பிரதீப்

புதுப்புது டெக்னாலஜிகள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் பல மோசமான செயல்களுக்கு தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு கருத்தை தான் இப்படம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது. ஆனால் அந்த விஷயத்தை சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய இயக்குனர் ஒரு இடத்தில் மட்டும் சறுக்கி விட்டார்.

அதாவது லவ் டுடே திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயின் இவானாவின் முகத்தை மார்பிங் செய்து படுமோசமான ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிடுவது போன்று காட்டப்பட்டிருக்கும். அதனால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அதிலிருந்து ஹீரோயின் எப்படி வெளி வருகிறார் என்பதை பற்றி இயக்குனர் காட்டியிருந்தாலும், அப்படி ஒரு விஷயத்தை டெக்னாலஜியை பயன்படுத்தி எப்படி செய்வது என்ற விஷயத்தையும் அவர் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

Also read: ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆனா உதயநிதி!

அது மட்டுமல்லாமல் அந்த சாப்ட்வேர் பெயரை கூட அந்த காட்சியில் காட்டி இருப்பார்கள். இது நிச்சயமாக ஒரு தவறான முன்னுதாரணம் தான். மேலும் இதை பார்த்து சில இளைஞர்கள் பெண்களை பழிவாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இதைத்தான் தற்போது பொதுமக்கள் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். சினிமாவில் நல்லதை நினைத்து சில விஷயங்கள் காட்டப்பட்டாலும் அது சில எதிர்மறையான விஷயங்களுக்கும் வழிவகுக்கும்.

அப்படித்தான் லவ் டுடே திரைப்படத்திலும் அந்தக் காட்சி தற்போது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அபாயமாகவும் மாறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில வக்ரம் பிடித்த மனிதர்களுக்கு இயக்குனரே ரூட் போட்டு கொடுத்தது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லாத இந்த சமூகத்தில் இதுபோன்று படத்தில் இடம் பெற்றுள்ள அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் அந்த காட்சியை வேறு விதமாக மாற்றி எடுக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் பிரதீப் இந்த விஷயத்தை மனதில் வைத்து சம்பந்தப்பட்ட காட்சியை சரி செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கோமாளி படத்தில் மனிதநேயம் பற்றி சொல்லிய பிரதீப் இப்படத்தில் சர்ச்சையாக பார்க்கப்படும் அந்த காட்சியை கடமை உணர்வோடு சரி செய்ய வேண்டும் என்பதுதான் ஆடியன்ஸின் வேண்டுகோளாக இருக்கிறது.

Also read: சின்ன பையனு அசால்ட்டா நெனச்சது தப்பா போச்சே.! அக்கட தேசத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்த லவ் டுடே

Trending News