சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சைலன்ட் ஆக வந்து அசுர வசூல் வேட்டையாடும் லவ் டுடே.. 3வது நாளில் இத்தனை கோடி வசூலா!

நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதை லவ் டுடே படம் நிரூபித்த காட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து இருக்கும் இப்படம் சுந்தர் சி யின் காபி வித் காதல் படத்திற்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளைய சமுதாயத்தின் காதல் எப்படி இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக லவ் டுடே படம் எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also Read : வசூலில் டாப் கியரில் செல்லும் லவ் டுடே.. இரண்டு நாளைக்கே இவ்வளவா?

லவ் டுடே படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து இந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகமாக ஒதுக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக இந்த படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்றே நாளில் போட்ட வசூலை படக்குழு எடுத்துவிட்டது.

அதாவது லவ் டுடே படம் முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் 4 கோடி வசூல் செய்திருந்தது. உலகம் முழுவதும் மொத்தமாக 6 கோடி வசூல் ஈட்டியது. முதல் நாள் குறைவாக பெற்றாலும் படத்தின் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்கள் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

Also Read : ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

இரண்டாவது நாள் தமிழ்நாட்டில் மட்டும் 6.6 கோடியும் உலகம் முழுவதும் 9.5 கோடியும் வசூல் வேட்டையாடியது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் முடிவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் 9 இருந்து 10 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்துள்ளது.

மேலும் லவ் டுடே படம் உலகம் முழுவதும் 11ல் இருந்து 12 கோடி நேற்று வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மொத்தமாக லவ் டுடே இதுவரை தமிழ்நாட்டில் 20.6 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 27.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பிரமோஷன் செய்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் சைலன்ட் ஆக வந்து லவ் டுடே வசூல் வேட்டையாடி வருகிறது.

Also Read : காதலைக் கேவலப்படுத்தும் இந்த தலைமுறைக்கு செருப்படி கொடுத்த லவ் டுடே.. ட்விட்டர்ல இவங்க விமர்சனம்தான் ட்ரெண்டிங்

Trending News