செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நம்பர் நடிகையின் வளர்ச்சியை முடக்கும் காதலர்.. கடிவாளம் போட, பக்கா பிளான்!

சினிமாவில் மார்க்கெட் இருக்கும் வரைக்கும் மட்டுமே கதாநாயகியாக படிக்க முடியும் என்பதை ஆழமாக புரிந்து வைத்திருக்கும் நம்பர் நடிகை இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம்.

ஆனால் இப்பவே பலகாலம் கடந்து விட்டது என வருந்துகிற காதலன், சீக்கிரம் நம்பர் நடிகைக்கு கடிவாளம் போட திட்டமிட்டு இருக்கிறார். இதற்கெல்லாம் நம்பர் நடிகை பிடி கொடுக்காமல் சினிமாவில் வேற லெவலுக்கு போக வேண்டும் என்பதிலேயே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் வட இந்திய மார்க்கெட்டை தட்டி தூக்கிக் கொண்டிருக்கும் சமத்து நடிகையுடன் போட்டி போட்டுக்கொண்டு நம்பர் நடிகையும் காப்பி இயக்குனருடன் கைகோர்த்து அங்கும் பிரபலமாக முயற்சிக்கிறார்.

இதனால் பல நிறுவனங்களும் நம்பர் நடிகையின் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்து அசந்து டஜன் கணக்கில் படவாய்ப்புகளை கொடுக்க முன்வந்திருக்கிறது. ஆனால் காதலன் இந்திய படக்கதை சரியில்லை என்று குறை கூறி அந்தப் படங்களில் கமிட்டாகி விடாமல் நம்பர் நடிகையை திசை திருப்புகிறார்.

இதை ஏற்கனவே நம்பர் நடிகையின் முன்னாள் காதலர் ஆன, கணவர் நடிகர் செய்ததால் அவரை கழட்டி விட்ட நம்பர் நடிகையிடம் சமயம் பார்த்து தான் சினிமாவில் கமிட்டாகி வருவதை குறைத்துக் கொள் என்பதை தெரியப்படுத்தனும் என்பதால் காதலர் பொறுமையை கையாள்கிறார்.

ஏனென்றால் கிளி பறந்து விடும் என்பதால் நம்பர் நடிகையை தடவிக்கொடுத்து, அவர் வழிக்கு வரும் வரைக்கும் பிரச்சனையும் மனக்கசப்பும் வரவிடாமல் பக்குவமாக பல விஷயங்களை பிளான் போட்டு செய்து கொண்டிருக்கிறாராம்.

Trending News