வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உங்களுக்கு அல்வா எனக்கு மட்டும் தக்காளி தொக்கா, கடும் கோபத்தில் அஜித்.. லைக்காவுக்கு ஆப்பு வைக்கும் ஏகே

Lyca cheating Ajith by not paying him for vidaamuyarchi movie: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வட்டம் போட்டு அதில் கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவர் தான் தன்மான சிங்கம் அஜித்.

யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கைகளை விடாமல் விடாப்பிடியாக நிற்கும் அஜித்தை சீண்டி பார்க்கிறது விடாமுயற்சியின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா.

வெற்றியோ? தோல்வியோ? ஒரு படம் தயாரிப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதே சமயம் நடிகர்கள் தனது சம்பள விஷயத்தில் கறாராக இருந்து வருவது உலக இயற்கையே.

இருந்த போதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது எந்த ஒரு திரைப்படத்திற்கும் முழுவதுமாக அட்வான்ஸ் வாங்குவது கிடையாது. 

தயாரிப்பாளர்களின் சுமையை அறிந்து  தனது சம்பளத் தொகையை பிரித்து வாங்குவாராம். இவரது இந்த நடைமுறை பிடித்துப் போகவே டைரக்டர் சங்கரும் அஜித்தின் வழியை பாலோ செய்கிறார் என்பது செவிவழி செய்தி.

அஜித்திற்கு சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கும் லைக்கா

அஜித் அவர்கள் விடாமுயற்சியின் படத்தின் சம்பளம் 170 கோடியை மொத்தமாக வாங்காமல் மாத மாதம் என்று பிரித்து வாங்குவார். இப்படி பிரித்தும் கொடுக்கும் முடியாமல் அஜித்தை ஏமாற்றி வருகின்றது தயாரிப்பு நிறுவனம்.

இவ்வாறு தயாரிப்பு நிறுவனத்தின் நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு, தற்போது தனக்கே வினையாகும் என்பதை அறிய முடியாமல் போனார் அஜித்.

லைக்கா விடாமுயற்சி தவிர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன்,  மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபர் என பல படங்களை தயாரித்து வருகிறது,

விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் ஆடியோ உரிமைகளும் விற்று தீர்ந்தாகிவிட்டது. அந்த தொகையை கொடுத்து அஜித்தை ஒரே செட்டில்மெண்டில் முடித்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் சம்பளத்தை  இழுத்தடித்துக் கொண்டே வருகின்றனர். விடாமுயற்சி சூட்டிங்கிற்கு தேவையான அனைத்தையும் ஒழுங்கா பண்ணி வருகிறது. அவங்களுக்கு லாபகரமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது.

மற்ற  படங்கள் மற்றும் நடிகர்களின் சம்பள விஷயத்தில் கரெக்டாக நடந்து கொள்ளும் லைக்கா, அஜித்துக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை மட்டும் ஒழுங்காக கொடுக்க முடியாமல் இழுத்தடிப்பது அஜித்தை  கொந்தளிக்க செய்துள்ளது.

90 சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பை முடித்து உள்ள விடாமுயற்சியின் எதிர்காலம், இனி அஜித் கையில் மட்டுமே உள்ளது.  

ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொள்ளுமாறு பட குழுவினருக்கு கட்டளை இட்டுள்ளார் அஜித். 

இதற்குப் பின் ஜூன் மாதத்தில் இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணையும் குட் பேட் அக்லி படத்தில் கவனம் செலுத்த போவதாக கூறியுள்ளார். 

எப்போதுமே தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்கத்துடன் சுமூகமான போக்கை கடைபிடித்து வரும் அஜித்திற்கு இந்த விடாமுயற்சி பெரும் தலைவலியாக மாறி உள்ளது என்பது மட்டும் உண்மை.

Trending News