திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தொடக்கதிலேயே வாரி சுருட்டி ஏப்பம் விடும் உதயநிதி.. தலையில் துண்டை போட்டு முழிக்கும் லைக்கா

லைக்கா நிறுவனம் இப்பொழுது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது. 3 பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் கமிட் செய்து திக்கு முக்காடி வருகிறது. வேட்டையன், விடாமுயற்சி, இந்தியன் 2 மூன்று படங்களும் பெரிய சிக்கலில் தவித்து வருகிறது. இதனால் வேட்டையணையில் நடித்து வரும் ரஜினியே மிகப்பெரிய அப்சட்டில் இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து பல தடைகளை பார்த்து வந்த இந்தியன் 2 படம் ஒரு வழியா முடிந்துவிட்டது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பிரம்மாண்ட பாடலை எடுக்க நினைத்த சங்கர், லைக்காவின் நிதி நெருக்கடியானால் அந்த பாடல் இல்லாமலே படத்தை நிறைவு செய்துவிட்டார். ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 ரிலீஸ் ஆக இருக்கிறது .

இந்த படத்தில் வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சி படத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளித்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளது லைக்கா. ஆனால் அதற்கு இப்பொழுது முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ். இந்த படத்திற்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தது உதயநிதி தான்.

தலையில் துண்டை போட்டு முழிக்கும் லைக்கா

இந்தியன் 2 பட வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. இந்த பணம் கைக்கு வந்து விடும் என எண்ணிய லைக்காவிற்கு முட்டுக்கட்டை போட்டது உதயநிதி தரப்பு. இந்த படத்திற்காக நாங்கள் நிறைய பணம் செலவு செய்துள்ளோம். ஆகையால் வரும் லாபத்தை முதலில் நாங்கள் எடுத்துக் கொள்வோம் என லைக்காவிற்கு செக் வைத்துள்ளது.

இப்பொழுது வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்களுக்கு பணம் இல்லாமல் திணறிவரும் நிலையில் உதயநிதி தரப்பு இப்படி கூறியதில் இருந்து லைக்கா பெரும் தர்ம சங்கடத்தில் இருந்து வருகிறது. அஜித்தே வரம் கொடுத்தாலும் விடா முயற்சி படத்திற்கு மேலும் மேலும் சிக்கல் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட 250 கோடியில் ஆரம்பித்து இன்று 350 கோடி வரை ஆகிவிட்டது. இவ்வளவு செலவு செய்து எடுத்தும் கூட சங்கருக்கு முழு திருப்தி கிடைக்கவில்லையாம். இந்த படத்தில் சங்கர் மற்றும் கமல் இருவரும் உச்சம் அடைந்திருக்கிறார்களாம். ஏற்கனவே நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் இந்த கூட்டணி மிகப் பெரிய சக்சஸ் ஆகும் என்று கமல் பேசியுள்ளார்.

Trending News