சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஷங்கர் சகாப்தத்திற்கு முடிவு கட்ட வலை பின்னிய லைகா.. கமலால் முடிவுக்கு வந்த மனப்புழுக்கம்

இந்தியன் 3 படத்தை முடித்து தருவதற்கு ஷங்கர் லைகாவிடம் மேலும் 80 கோடிகள் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். இதில் அவரது 35 கோடிகள் சம்பளமும் அடக்கம். லைகா தரப்பு ஷங்க ரிடம் சம்பளத்தை விட்டுக் கொடுக்குமாறு வினாவியுள்ளது.

இனிமேலும் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்க முடியாது. செலவழித்தாலும் படம் தியேட்டரில் ஓட வேண்டும், இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என மனக்கணக்கு போட்டு OTT பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. அப்படி ரிலீஸ் செய்தால் ஷங்கர் சம்பாதித்த மொத்த பெயரும் போய்விடும்.

கமலும் லைகாவின் இந்த திட்டத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் உதயநிதி, சங்கர், கமல், லைகா நிறுவனம் என அனைவருக்கும் இடையே வீடியோ காலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு சுமுகமான முடிவை எடுத்துள்ளனர்.

கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இதற்கு உடன்பட்டு இறங்கி வந்துள்ளனர். ஷங்கர் லைகா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதுவரை இந்திய 3 படத்தில் எடுத்த காட்சிகள் அனைத்தையும் அவர்களிடம் போட்டு காண்பிக்க சம்மதித்துள்ளார் . கமலும் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் இந்தியன் 3 படத்தை கையில் எடுக்கிறார்.

கமல், அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்கள் உடன் ஒரு படம் பண்ண கால் சீட் கொடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு, இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.

Trending News