திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

AK 62 – 10 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் மகிழ் திருமேனி.. லியோவை குறிவைத்து லைக்கா போடும் ஆடு புலி ஆட்டம்

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய 62 வது திரைப்படத்தில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் பணிபுரிய இருக்கிறார். இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே இருந்து வந்த நிலையில், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் தன்னுடைய 62 ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இயக்குனர் உறுதியான நிலையில் தற்போது படத்தில் நடிக்கும் பிற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு குறிப்பிட்ட அளவு என்று எந்த பட்ஜெட்டும் திட்டமிடவில்லை. படம் எந்த அளவுக்கு போகிறதோ போகட்டும் கணக்கு வழக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அஜித் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Also Read: அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

இயக்குனர் மகிழ் திருமேனியை பொருத்தவரைக்கும் அவர் இதுவரைக்கும் ரொம்ப லோ பட்ஜெட் படங்களை தான் இயக்கியிருக்கிறார். இவருடைய கடைசி படத்தின் சம்பளமே ஐம்பது லட்சம் தான். லோ பட்ஜெட் திரைப்படங்கள் என்றாலும் அவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களத்துடன் வெற்றி கண்டவை தான். ஆனால் மகிழ் திருமேனி முதல்முறையாக அதிகபட்ச படத்தை இயக்க இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் மூலம் தற்போது இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போதைய தகவல் படி இதுவரைக்கும் படத்தின் பட்ஜெட் ஆக 250 கோடி வரை திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதனால் படத்தின் இயக்குனருக்கு சம்பளம் 5 கோடி. அதாவது மகிழ் திருமேனிக்கு பத்து மடங்கு வரை சம்பளத்தை உயர்த்தி இருக்கிறது லைக்கா தயாரிப்பு நிறுவனம்.

Also Read: நல்ல ஒரு அந்தஸ்து இருந்தும் சினிமாவில் தோற்ற 6 இளசுகள்.. காணாமல் போன அஜித் தம்பி

இது இவரே எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான். சம்பளத்திற்கு ஏற்றவாறு படத்தின் ஒவ்வொரு காட்சிகள் மேலும் அதிகப்படியாக சண்டை காட்சிகளில் ரொம்பவும் மெனக்கெட இருக்கிறாராம் . AK 62 என்பது இவர் எதிர்பார்க்காத ஒரு திருப்பம்தான். மேலும் ஒரே படத்தில் பத்து மடங்கு சம்பளம் உயர்த்துவது என்பதெல்லாம் ரொம்பவும் அதிர்ஷ்டமான விஷயம்.

கோடிக்கணக்கில் கொட்டி இறைக்க காத்திருக்கும் லைக்காவின் திட்டமே வேறு. எப்படியாவது இந்த படத்தை தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோத விட வேண்டும் என்பதுதான் லைக்காவின் திட்டம். எப்படி வாரிசுடன் மோதியதால் துணிவு வசூலில் களைகட்டியதோ அதையே தற்போது லைக்கா நிறுவனம் ஏகே 62 வில் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

Also Read: துணிவுடன் கனெக்ட்டாகும் ஏகே 62 டைட்டில்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் அஜித்

Trending News