சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கள்ள பணத்தால் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் லைக்கா.. கைக்குள் போட்டுக்கொண்ட மணிரத்தினம்

Lycia Produce films from illegal source: லைக்கா சுபாஸ்கரன் இவர் ஒரு இலங்கை தமிழர். இலங்கையில் இருந்து அகதிகளாக பிரான்ஸ் சென்றார். அங்கே ஒரு பெட்டி கடை நடத்தியுள்ளார். அங்கே மொபைல் போனுக்கான சிம் கார்டு வாங்கி விற்கும் தொழில் பண்ணியுள்ளார்.

பிரான்சில் கிட்டத்தட்ட 10 லட்சம் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு தங்கள் உறவுகள் இருக்கும் இலங்கையிடம் பேசுவதற்கு தொலைதொடர்பு கட்டணம் மிக அதிகம். மலிவாக பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

சிம்கார்டு பிசினஸ் செய்யும் சுபாஸ்கரன் இதற்கு அந்த நிறுவனத்திடம் பேசி மலிவாக பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறார். இதன் மூலம் 10 லட்சம் சந்தாதாரர்களை தன் வசப்படுத்தி தொலைதொடர்பு மார்க்கெட்டை பிடிக்கிறார்.

கைக்குள் போட்டுக்கொண்ட மணிரத்தினம்

அதன் பின் தான் லைக்கா என்னும் நிறுவனம் தோன்றுகிறது. இதனிடம் இருந்து பிரிந்து சென்ற நிறுவனம்தான் லிப்ரா. லைக்கா நிறுவனம் பிரான்சுக்கு கிட்டத்தட்ட 4000 கோடிகள் பணம் கட்டாமல் அங்கே இருந்து தப்பி பிரிட்டன் சென்றது. இன்றும் பிரான்சில் லைக்கா மீது வழக்கு இருக்கிறது.

அந்த பணத்தில் தான் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் கூறுகிறார். இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் சுபாஸ்கரனின் லைக்காவும் ஒன்று.

எவராலும் எடுக்க முடியாத பெரும் படங்களை எல்லாம் தன்னிடம் உள்ள பணத்தால் லைக்கா தயாரித்து விடுகிறது. குறிப்பாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை சொல்லலாம். இந்த படம் எடுப்பதற்கு பட்ஜெட் இல்லாமல் பல தயாரிப்பாளர்கள் கைவிட்டு உள்ளனர். இப்பொழுது ரஜினிகாந்த், மணிரத்தினம் உள்ளிட்டவர்களுக்கு பெரும் பட்ஜெட் படம் தயாரித்து வருகிறது லைக்கா.

Trending News