செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வலிமைக்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய அஜித்.. வெற்றியோ தோல்வியோ அள்ளி கொடுக்கும் லைகா

அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அஜீத் மீண்டும் இதே கூட்டணியுடன் தன்னுடைய 61வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். மூன்றாவது முறையாக கைகோர்க்கும் இந்த கூட்டணி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அஜீத் தன்னுடைய 62வது திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனத்திற்கு தர சம்மதித்து உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான மற்றொரு தகவலும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக லைகா புரடக்ஷன்ஸ் அஜித்துக்கு 105 கோடி சம்பளம் தர சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வலிமை படத்திற்கு 70 முதல் 80 கோடி சம்பளம் வாங்கி அஜித் தற்போது லைகா தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு 100 கோடி வரை சம்பளத்தை கேட்டு உள்ளார். இதனை ஒப்புக்கொண்ட லைக்கா வரியுடன் சேர்த்து மொத்தமாக 105 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைகா தற்போது பொன்னியின் செல்வன் உட்பட பல மெகா பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் முதல் முறையாக அஜித்தின் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதுவரைக்கும் அஜித் 55 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

Trending News