ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எதே லால் சலாம் சக்ஸஸா.? வேட்டையனை காப்பாற்ற நல்லா உருட்டும் லைக்கா

Lal Salaam-Lyca: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. மத நல்லிணக்கத்தை பற்றிய கதையாக உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சுமார் 80 கோடி பட்ஜெட்டில் லைக்கா தயாரித்திருந்த இப்படம் போட்ட காசில் பாதியைக் கூட எடுக்கவில்லை. ஆனால் பட குழு தற்போது சக்சஸ் மீட் என்ற பெயரில் அலப்பறை செய்ததுதான் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

அதிலும் லைக்கா பட குழுவினர் அனைவரும் சூப்பர் ஸ்டாரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளது. மேலும் மக்களின் பேராதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. லால் சலாம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Also read: லைக்கா தலையில் துண்டை போட்ட லால் சலாம்.. ஸ்கோர் செய்த லவ்வர், 4ம் நாள் வசூல் நிலவரம்

படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஐஸ்வர்யாவின் இயக்கம் சொதப்பல் என வெளிப்படையாகவே விமர்சனங்கள் வந்தது. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் லைக்கா இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

இதன் மூலம் ரஜினியின் வர இருக்கும் படம் வேட்டையனை காப்பாற்றும் யுக்தியாக கூட இருக்கலாம். அது மட்டுமின்றி படம் தோல்வி என்று சொன்னால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைக்காது. அதனாலேயே தலைவருடைய ஆலோசனையின் பெயரில் இப்படி ஒரு விஷயம் நடத்தப்பட்டு இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் கலெக்ஷனில் சோடை போயிருந்த லால் சலாம் சக்சஸ் என்பதை மட்டும் நெட்டிசன்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அதனாலேயே தற்போது லைக்காவின் இந்த பதிவுக்கு அவர்கள் கிண்டலாக பதிலளித்து வருகின்றனர்.

Also read: லால் சலாம் படத்திற்கு டஃப் கொடுக்கும் லவ்வர்.. ஒரு வாரத்தில் செய்த கலெக்ஷன்

Trending News