சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Indian 2: சங்கர் தலையில் குண்டை தூக்கிப் போட்ட லைக்கா.. இந்தியன் 2 படத்துக்கு வந்த சிக்கல்

Indian 2: இந்தா வருது அந்தா வருதுன்னு கிட்டத்தட்ட ஐந்து வருடமாக இந்தியன் 2 படம் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் படம் வெளிவந்த பாடாக இல்லை. என்ன நேரத்தில் இந்த படத்தை ஆரம்பித்தார்களோ, அப்போதிலிருந்து இப்பொழுது வரை ஏதாவது ஒரு சிக்கலில் தவித்து வருகிறது.

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் கேரியரில் இப்படி ஒரு சிக்கலா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு பண்ணினார்கள். பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள்.

இந்த நிலையில் ஜூன் 13 தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லையாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

அதுவும் அந்த பாடல் இந்த படத்திற்கு ரொம்பவே முக்கியமாக இருக்கும் என்று சங்கர் நினைக்கிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கு செலவு பண்ணி எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி இருக்கிறார். இந்த விஷயத்தை லைக்கா-விடம் சொல்லிய பொழுது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

இப்பொழுது பண பிரச்சனையில் கொஞ்சம் தவித்து வருகிறேன். அதனால் நீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண முடியாது என்று சொல்லி சங்கர் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டு விட்டார். இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் அப்செட்டில் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போதைக்கு இந்த படம் வெளிவருவதாக இல்லை. இன்னும் ஜூலை மாதத்தில் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகிறது. இந்தியன் 2 படம் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழும்ப ஆரம்பித்துவிட்டது.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது லைக்காவுக்கு தான் ஏதோ நேரம் சரியில்லை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இவருடைய தயாரிப்பில் துவங்கப்பட்ட இந்தியன் 2 படமும் சரி, அஜித்தின் விடாமுயற்சி படமும் அந்தரத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Trending News