திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Rajinikanth: லைக்காவால் அமிதாப்பச்சனுக்கு ஏற்பட்ட அவமானம்.. கொழுந்துவிட்டு எரிந்த ரஜினிகாந்த் 

பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் அசால்டாக  ஹேண்டில் பண்ணும் லைக்கா இப்பொழுது பெரும் சங்கடத்தில் இருக்கிறது. தற்போது தயாரித்து கொண்டிருக்கும்  மூன்று படங்களையும் முடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது.

 ரஜினி, கமல், அஜித் மூவருமே லைக்கா மீது பெரிய அதிருப்தியில் இருக்கின்றனர். பணம் பற்றாக்குறையால் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில்  மீதமுள்ள ஒரு பாடல் காட்சியை வேண்டாம் என்று  சங்கரிடம் கூறியுள்ளனர் லைக்கா. அஜித்தை கூட சம்பளத்தை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள் .

கொழுந்துவிட்டு எரிந்த ரஜினிகாந்த் 

 இப்படி ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் ஒவ்வொரு விதமான சங்கடத்தை கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் ரஜினிகாந்த் லைக்காவை அழைத்து கோபத்தில் திட்டி உள்ளார். என்னுடைய சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு சங்கடத்தை நான் பார்த்ததில்லை என ரஜினி காட்டாம பேசி உள்ளார்.

 ரஜினி இப்படி பேசியதற்கு காரணம், அவரின் நண்பர் பாலிவுட் ராஜாவாக விளங்கி வரும் அமிதாபச்சன் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். அவர் பட சூட்டிங்கிற்காக பெங்களூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு கூட லைக்கா பணம் செலுத்தவில்லை.

 இதை ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக அமிதாப்பச்சனிடம் கேட்டுள்ளது. அவர் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து ஹோட்டலுக்கு வாடகை செலுத்தி உள்ளார். இது ரஜினி காதுகளுக்கு போகவே மிகவும் கோபப்பட்டு மனவேதனையில் லைக்காவை  திட்டி இருக்கிறார். 

Trending News