ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெய்டுக்கு பயந்து பணம் கஷ்டம் என புலம்பும் லைக்கா.. பெத்த லாபத்தில்  சுபாஸ்கரனின் தரமான சம்பவங்கள்

Lyca Subaskaran sees profit before Indian 2 and Vidaamuyarchi release: சினிமாவில் பிரம்மாண்டம், முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் மசாலகதை இவையே வெற்றி! வசூலில் தன்னிறைவு! என தமிழ் சினிமா புது கலாச்சாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. திரை கதையை மட்டுமே நம்பி வரும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுவதில்லை. 

இந்த வணிக ரீதியான வசூல் கணக்கை திறம்பட செய்து கொடிகட்டி பறக்கும் தயாரிப்பு நிறுவனம்தான் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். 2014 இல் கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த லைக்கா இன்று வடசென்னை, தர்பார், டான், பொன்னியின் செல்வன் என ஏறுமுகமாகவே தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது. இருந்த போதும்  இந்நிறுவனம் சில நிகழ்வுகளில் பண கஷ்டம் என்று புலம்பி வருகிறது.  இவ்வாறு புலம்பும் லைக்காவின் கையில் நூறு கோடி பட்ஜெட்டை தாண்டிய நாலு படங்கள் உள்ளது  அவை,

விடாமுயற்சி:  மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தினை மாபெரும் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது லைக்கா. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இதன் தொலைக்காட்சி உரிமை சன் டிவிக்கும் ஓ டி டி உரிமையை நெட்பிளிக்ஸ்க்கும் விற்று 250 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி உள்ளார் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன்

Also read:லைக்காவுக்கு தலைவலியாய் மாறிய விடாக் கண்டன்.. நடுக்கடலில் தத்தளிக்கும் அஜித்தின் விடாமுயற்சி

எம்புரான்: L2E எனப்படும் எம்புரான் என்கின்ற மலையாள படத்தில்  முதலீடு செய்துள்ளார் சுபாஸ்கரன். மோகன்லால், மஞ்சு வாரியர் பிரித்திவிராஜ் போன்ற முன்னணி நட்சத்திர பட்டாளங்களுடன் அரசியல் சார்ந்த கதையை  மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து அதிரடியாக தயாரித்து வருகிறது லைக்கா.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஆண்டு டப்பிங் முதலான வேலை நிறைவடைந்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே நெட் பிளிக்ஸ் நிறுவனம் 220 கோடி கொடுத்து இதன் ஓடிடி உரிமையை வாங்கிஉள்ளது அனைத்துமே லாபத்துடன் சென்றபோதும் அவ்வப்போது நடக்கும் ரெய்டுக்கு பயந்து சுபாஸ்கரன் நஷ்டத்தில் இருப்பதாக மீடியாக்கள் முன்  பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

வேட்டையன்: ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவரின் 170 வது படமான வேட்டையன் திரைப்படத்தை மாபெரும் பொருட் செலவில் உருவாக்கி வருகிறது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான இயக்குனர் தரமான படமாதலால் வசூலில் பல மடங்கு லாபத்தை எதிர் நோக்கியே இந்த ப்ராஜெக்ட்டை கையில் எடுத்ததுள்ளது லைக்கா நிறுவனம். 

Also read: ரஜினியின் கொஞ்சம் நெஞ்ச நிம்மதியையும் கெடுத்து விட்டு ஐஸ்வர்யா.. அஜித் வரை சென்ற பஞ்சாயத்து

Trending News