வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எல்லாம் விஜய்யை அடிபணிய வைக்கத்தான்.. பப்ளிசிட்டிக்காக தில்லுமுல்லு செய்யும் லைக்கா

Actor Vijay: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் விஜய், தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து தளபதி 68 படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய்யை அடிபணிய வைக்க லைக்கா பக்கா தில்லுமுல்லு வேலையை பார்த்துள்ளது.

கடந்த 9 வருடத்திற்கு முன்பு லைக்கா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி படம் எதிர்பார்த்த அளவு வசூலை அள்ளவில்லை என தளபதியின் மீது பெரும் அதிருப்தி அடைந்தனர். விஷயம் எப்படியோ விஜய் காதில் எட்டியதும், இனிமேல் லைக்காவுடன் இணைந்த படம் பண்ண கூடாது என முடிவெடுத்து இத்தனை வருடங்களாக அந்த முடிவில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்.

Also Read: விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

இதனால் அவரை எப்படியாவது அடிபணிய வைக்க வேண்டும் என விஜய்யின் மகனை வைத்து டார்கெட் செய்கின்றனர். இவர்களுடைய தில்லுமுல்லு வேலை தெரியாத தளபதியின் மகன் ஜேசன் சஞ்சையும் இப்போது அவர்கள் வசம் லாக் ஆகிவிட்டார். சினிமா ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் அதற்கான படிப்பை முடித்துவிட்டு இப்போது லைக்கா தயாரிப்பில் இயக்குனராக அவதாரம் எடுத்து விட்டார்.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குள் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு ஹீரோ ரெடி, ஹீரோயின் ரெடி என எல்லோரும் கை, கால் வைத்து பேசி வருகின்றன. சூப்பரான கதையைச் சொல்லி விஜய் மகன் லைக்காவை கவர்ந்து விட்டார். இந்த படம் சூப்பர் ஹிட் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Also Read: வாரிசுகளுக்கு போட்டியாக நடிக்கும் 5 அப்பா ஹீரோக்கள்.. இப்பவும் நடிப்பு அரக்கனாக சுற்றிவரும் சீயான்

ஆனால் வெறும் ஒன் லைன் ஸ்டோரியை மட்டும்தான் ஜேசன் சஞ்சய் சொல்லி இருக்கிறார். அது பிடித்துப் போகவே லைக்கா தயாரிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது. அறுவடை செய்ய இப்ப தான் நிலமே பார்த்து இருக்கிறார். அதற்குள் பெரிய இயக்குனர் போல் ஜேசன் சஞ்சையை பேசி வருகின்றனர்.

இந்த அளவிற்கு பரபரப்பாக பேசுவதற்கு காரணம் லைக்காதான். இதெல்லாம் அவர்கள் காட்டும் அலப்பறை தான். மகனை வைத்து எப்படியாவது விஜய்யை வளைத்துப் போட்டு விட வேண்டும் என்பதற்காகவே லைக்கா இந்த மாதிரி தில்லுமுல்லு செய்து வருகிறது.

Also Read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

Trending News