திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இழுபறியில் லைக்காவின் விடாமுயற்சி.. பெரும் தலைவலியால் சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம்

Lyca – Vidamuyarchi: தமிழ் சினிமாவில் தற்போதைக்கு லைக்கா தயாரிப்பு நிறுவனம் தான் அசைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாமே லைக்காவின் கைவசம் தான் இருக்கிறது. மேலும் அடுத்தடுத்து பட அப்டேட்டுகளையும் வெளிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். ஒரு பெரிய ப்ராஜெக்ட் படம் என்றாலே அது இந்த நிறுவனத்தினால் மட்டும்தான் தயாரிக்க முடியும் என்ற நிலைமை தற்போது வந்துவிட்டது.

மேலும் லைக்கா தயாரிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, சந்திரமுகி 2, மிஷன், லால் சலாம் போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. மேலும் ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படத்தையும் லைக்கா தான் தயாரிக்கிறது. தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குனராக இந்த நிறுவனம் தான் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Also Read:தயாரிப்பாளர்கள் வலி தெரிந்து நடந்து கொள்ளும் அஜித்.. எல்லா படத்துக்கும் இதே நிலைமைதான்னா எப்படி பாஸ்

இப்படி அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வரும் லைக்காவுக்கு இழுபறியாக இருப்பது நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் தான். இந்த நிறுவனம் அடுத்து அஜித்துடன் படம் பண்ண இருக்கிறது என அப்டேட் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. மேலும் படத்தின் டைட்டில் வெளியாகியும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.

ஆனால் இதுவரை படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிய பாடில்லை. இப்போதுதான் படத்திற்கான லொகேஷன் தேடும் வேலைகளை பட குழு ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இனி எல்லாம் சரி செய்யப்பட்டு படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. இது அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

Also Read:அஜித் எங்களுக்கு மருமகனே இல்ல.. 23 வருடங்கள் கழித்து வாய் திறந்த ஷாலினியின் அப்பா!

டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான லைக்கா அஜித்தின் விடாமுயற்சி படத்தை மட்டும் எப்படி இது போல் இழுபறியாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அடுத்தடுத்து மற்ற வேலைகளில் பிஸியாக இருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் லூசிபர். இந்த படத்தை நடிகர் பிரிதிவிராஜ் இயக்கியிருந்தார். தற்போது லூசிபர் 2 உருவாக இருக்கிறது. இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

Trending News