திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

ஏகே 62 அப்டேட் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்த நாளான இன்று டைட்டில் போஸ்டருடன் படக்குழு செம ட்ரீட் கொடுத்துள்ளது. விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். மேலும் லைக்கா பிரம்மாண்டமாக விடாமுயற்சி படத்தை தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்களில் அஜித் நடித்திருந்தார். முதலாவதாக இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. அப்போது என்ன சம்பளம் பேசப்பட்டதோ அதை தான் மூன்று படங்களுக்கு அஜித் வாங்கி இருந்தார்.

Also read: 95 கிலோ எடையின் சீக்ரெட்.. அஜித்துக்கு தலைவலியாக இருக்கும் பிரச்சனை

அப்போது பல தயாரிப்பாளர்கள் 100 கோடிக்கு அதிகமாக சம்பளம் தருவதாக கூறி அஜித்தை அழைத்தனர். ஆனால் அஜித் கொடுத்த வாக்குறுதிக்காக போனி கபூர் படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால் தற்சமயம் அந்த கூட்டணியில் இருந்து விலகி லைக்காவுடன் இணைந்துள்ளதால் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி விடாமுயற்சி படத்திற்கு அஜித்திற்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் இன்னும் சம்பளம் அதிகமாக உள்ளது. ஆகையால் சம்பள விஷயத்தில் இனி அஜித்துக்கு ஏறுமுகம் தான். மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் விஜய் இருந்தார்.

Also read: ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இதற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் அடுத்தடுத்த படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை ரஜினி குறைத்துக் கொண்டார். அதனால் தற்போது ஜெயிலர் படத்திற்கு 100 கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் பெற்றிருக்கிறார்.

ஆகையால் தற்போது டாப் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடத்தை அஜித் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த படங்களில் சம்பளம் உயர்த்தப்பட்டால் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் அஜித்தின் இந்த வளர்ச்சி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Also read: AK 52,62 என ட்விட்டரை ஆக்கிரமித்த அஜித்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் அஜித் ஃபேன்ஸ்

Trending News