செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கைக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட எம் ராஜா.. தளபதிக்கு போட்ட பெரிய ஸ்கெட்ச்

தளபதி விஜய் தன்னுடைய 66-வது படமான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக உருவாகிக்கொண்டிருக்கும் இ  தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கின்றனர். இன்னிலையில் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா உடன் தளபதி விஜய் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனான இவர், ஆரம்ப காலத்தில் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். முதல் முதலாக தளபதி விஜய் உடன் இணைய இருக்கும் மோகன் ராஜா சமீபத்திய பேட்டியில், ‘விஜயின் படங்கள் தள்ளி போவதற்கு நான் தான் காரணம். இடையில் அவருடைய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த சமயம் கைவசம் படத்திற்குரிய முழுக்கதையும் ரெடியாக வில்லை. கொரோனா சமயத்தில் இயக்குனர் மோகன் ராஜா 7 கதைகளை தயார் செய்திருக்கிறார். அதில் விஜய்க்கு ஒரு கதையை ஸ்பெஷலாக ரெடி பண்ணியிருக்கிறாராம்.

அந்தப் பாடத்தில் முழு கதையும் ரெடியாகி, எனக்கு நம்பிக்கை வந்த பிறகு அவரிடம் கதையை சொல்ல மோகன் ராஜா முடிவெடுத்திருக்கிறாராம். இருப்பினும் நிச்சயம் மோகன் ராஜா-விஜய் கூட்டணியில் விரைவில் உருவாகும் என்றும் அடித்துக் கூறியிருக்கிறார்.

அரை டஜனுக்கும் மேலாக கதையை கையில் வைத்திருக்கும் மோகன் ராஜா நிச்சயம் ஏதாவது ஒரு கதையை சொல்லி தளபதியை ஒத்துக்க வைத்துவிடுவார். ஆகையால் தளபதி 67 படத்திற்குப் பிறகு விஜய், மோகன் ராஜாவுடன் தான் இணைவார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Trending News