விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மாகாபா ஆனந்த். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் மாகாபாவின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஆடியன்சுக்கு போஃர் அடிக்காமல் எடுத்து செல்வதில் மாகாபா வல்லவர்.
விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்று சாதித்துள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள்தான். அந்த வகையில் மாகாபாவும் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அதன்பிறகு மாகாபா சில படங்களில் நடித்தாலும் சின்னத்திரை அளவிற்கு வெள்ளித்திரையில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரை மிகவும் பிரபலமாக்கியது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
ஆரம்பத்தில் மாகாபாவும், பாவனாவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதனால் மாகாபா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். அதன்பிறகு பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா தொகுத்து வழங்கினார்.
தற்போது விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா தான். ஆனால் இனிமேல் மாகாபா விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மாகாபா தற்போது குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல இருக்கிறார்.
இதனால் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து சில வாரங்கள் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்து சென்று வந்த பிறகு மாகாபா மீண்டும் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரைக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.