ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

4 நாட்கள் ஆகியும் போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் உதயநிதி.. கடைசி படத்தில் வாங்கிய அடி

Maamanan 4 Day Collection: உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் என்பதால் இந்த படத்தை அவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மாரி செல்வராஜ் இந்த படத்தை எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி இப்போது உள்ள அரசியல் சூழலுக்கு அழுத்தமான கருத்தை சொல்லும் படமாக மாமன்னன் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

Also Read : குரங்கு கையில பூமாலை கிடைச்ச கதைதான்.. எதையும் சரியாகப் பயன்படுத்தாத மாரி செல்வராஜ்

மாமன்னன் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் தான் வினியோகம் செய்தார். இந்த படத்தின் மூலம் பெத்த லாபம் பார்க்கலாம் என்று நினைத்தார் உதயநிதி. அதன்படி முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 6.75 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் இரண்டாம் நாள் முடிவில் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்தது.

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய வசூல் கிடைக்கவில்லை என்றாலும் சனிக்கிழமை 6.25 கோடி வசூல் செய்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

Also Read : மாமன்னன் படத்தை பார்த்த வெற்றிமாறன்.. ஒத்த வரியில் கொடுத்த விமர்சனம்

மேலும் இதுவரை மாமன்னன் படம் இந்திய அளவில் 23 கோடியும், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 6 கோடியும் கல்லா கட்டியுள்ளது. ஆகையால் மொத்தமாக உலக அளவில் மாமன்னன் 29 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் இனி வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மந்தமாக வாய்ப்பு இருக்கிறது. அதன்படி இந்த வாரத்திற்குள் இந்திய அளவில் எப்படியும் 30 கோடி வசூலை தொட்டுவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளனர்.

ஆனால் உதயநிதி மாமன்னன் படம் வசூல் பெற்றதோ, இல்லையோ படக்குழுவுக்கு பரிசை வழங்கி வருகிறார். அதன்படி இயக்குனர் மாரி செல்வராஜுக்கு விலை உயர்ந்த காரை சமீபத்தில் பரிசாக வழங்கி இருந்தார். அதேபோல் ஒளிபதிவாளர் மற்றும் படத்தில் வேலை செய்த பலருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறாராம்.

Also Read : வாய்க்கிழிய பேசின பேச்சுக்கும் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. மண்ணை கவ்விய மாமன்னன்

Trending News