செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மாமன்னனுக்கு பிறகு மாறிய வடிவேலுவின் இமேஜ்.. யார் சொல்றத நம்புறதுன்னு தெரியலையே!

Actor Vadivelu: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்த இந்த படத்தில் அதிகமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது வைகைப் புயல் வடிவேலு தான். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வடிவேலுவின் நடிப்பு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்த வடிவேலு 10 வருடத்திற்கு மேலாக, சினிமா வாய்ப்புகளே இல்லாமல் ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவருக்கு நடித்த படங்கள் எதுவுமே செட் ஆகவில்லை. இனி வடிவேலு அவ்வளவுதான், வடிவேலுவிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்று ஒரு கூட்டமே பேச ஆரம்பித்து விட்டது.

Also Read:வடிவேலு நல்லவரு, அஜித் ஈகோ புடிச்ச ஆளு.. வைகை புயலை இம்ப்ரஸ் செய்ய கூவும் நடிகர்

அவர் அடுத்தடுத்து நடித்த படங்களும் சினிமா ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், அவருடனே நடித்த நிறைய நடிகர்கள் வடிவேலுவை பற்றி அவதூறாக பேட்டியும் கொடுக்க ஆரம்பித்தனர். இது வைகைப்புயலுக்கு அடிமேல் அடியாக விழுந்தது. ரசிகர்களிடம் அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது.

தற்பொழுது மாமன்னன் ரிலீசுக்கு பிறகு வடிவேலுவின் இமேஜ் மொத்தமாக மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். சினிமா ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இது போதாது என்று அவருடன் நடித்த ஒரு சில நடிகர்கள் வடிவேலுவை பற்றி நிறைய பாசிட்டிவ் கருத்துகளை சமீபத்திய பேட்டிகளில் சொல்லி வருகிறார்கள்.

Also Read:மாமன்னனால் திசை மாறிய வடிவேலுவின் சினிமா பயணம்.. மாரி செல்வராஜால் வைகைப்புயலுக்கு வந்த வாழ்வு

வடிவேலுவின் பட்டறையில் இருந்து வந்த ராவ், டெலிபோன் ராஜ் போன்றவர்கள் கொடுத்திருக்கும் பேட்டியில் வடிவேலு எல்லோருக்கும் வாய்ப்புகளை வாரி வழங்குபவர் என்றும், தன்னுடைய குழுவில் இருக்கும் யாராவது ஒருத்தருக்கு சம்பள பாக்கி இருந்தால் கூட டப்பிங் பேச போக மாட்டாராம். மேலும் டெலிபோன் ராஜுக்கு தயாரிப்பாளரிடம் பேசி சம்பளம் அதிகமாக வாங்கி கொடுத்தாராம். தற்போது இதுபோன்று வடிவேலுவை நிறைய பாசிட்டிவ் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வரை வடிவேலு யாருக்கும் வாய்ப்புகள் கொடுக்க மாட்டார், சம்பளம் கொடுக்க மாட்டார், கூட நடிப்பவர்களை மதிக்க மாட்டார், அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள் என சேனலுக்கு சேனல் ஒரு கூட்டம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது ஒரு வெற்றிக்குப் பிறகு திடீரென வடிவேலுவின் ஆதரவாளர்கள் என ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. சினிமாவை பொறுத்த வரைக்கும் எதையுமே சட்டென நம்பிவிட முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Also Read:அஞ்சு ஆறு மாதம் வடிவேலுவை குப்புற படுக்க வைத்த சிங்கமுத்து.. வயிறு வலிக்க செய்த 5 படங்கள்

Trending News