புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியனின் அராஜகத்திற்கு மச்சான்கள் வச்ச ஆப்பு.. பலிகடாக சிக்கிய ராஜி மீனா, அப்பாவை எதிர்க்க போகும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சும்மாவே பாண்டியன் என் மகனுக்காக நான் பார்த்து கல்யாணம் நடத்தி வைத்த பொண்ணு தான் நல்ல மருமகள், பொறுப்பானவள், பண்பானவள், சிக்கனமானவள், அறிவாளி என்று ஓவராக பெருமைப் பேசி அனைவரையும் நோகடித்து தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். இதெல்லாம் சரி என்பதற்கு ஏற்ப தற்போது கதிர் மற்றும் ராஜியால் பாண்டியனுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டு விட்டது.

அதாவது பாண்டியன், ராஜி டியூஷன் எடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக சொன்னதற்கு முக்கிய காரணம் ராஜியின் அப்பா குடும்பத்தில் இருப்பவர்கள், ராஜியை வேலைக்கு அனுப்பி தான் சாப்பிடுகிறோம் என்று ஒரு தவறான சொல் சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான். அது மட்டுமில்லாமல் படிக்கிற பொண்ணு வேலைக்கு போகக்கூடாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு எண்ணத்திலும் ராஜி டியூஷன் எடுப்பதற்கு தடை விதித்தார்.

ருத்ரதாண்டவம் ஆடப்போகும் பாண்டியன்

ஆனால் அவர் நினைத்த மாதிரியே தற்போது இந்த விஷயம் பெரிய பூகம்பமாக விடுத்து விட்டது. அதாவது சக்திவேல் எதிர்ச்சியாக ராஜி எடுக்கும் டியூஷன் வீட்டிற்கு போய் இருக்கிறார். அவர்கள் ஏற்கனவே சக்திவேலுக்கு தெரிந்ததால் அங்கு இருந்து கிளம்பும்போது ராஜியை பார்த்து விடுகிறார்கள். உடனே அங்கு இருப்பவர்கள் இவங்க தான் ஹோம் டியூஷன் எடுப்பதற்கு வீட்டிற்கு வந்து சொல்லிக் கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இதை கேட்டதும் இதை வைத்து ஒரு பிரச்சனை பண்ணலாம் என்று சக்திவேல் வீட்டிற்கு வருகிறார். ஆனால் அதற்கு முன் இதைவிட ஒரு காரசாரமான விஷயம் தொக்காக அமைந்துவிட்டது என்பதற்கு ஏற்ப நகை விஷயமும் வெளிவந்துவிட்டது. அந்த வகையில் முத்துவேல், நகை என்ன பண்ணினாய் என்று கேட்டு வடிவை அடித்து துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்து தாங்க முடியாத மாரி, அக்கா எல்லா நகையும் எடுத்து உங்க பொண்ணுக்கு தான் கொடுத்திருக்காங்க என்று சொல்லிவிடுகிறார். உடனே கோபத்தில் இருந்த முத்துவேலுவை தூண்டிவிடும் விதமாக சக்திவேல் ராஜி டியூஷன் எடுப்பதையும் சொல்லி நம்ம பணத்தை வைத்து தான் பாண்டியன் பிழைத்து வருகிறான் என்பதற்கு ஏற்ப பல மட்டமான விஷயங்களை முத்துவேல் மண்டைக்குள் திணித்து விட்டார்.

உடனே ஆத்திரப்பட்ட முத்துவேல் மற்றும் சக்திவேல் சேர்ந்து பாண்டியன் வீட்டு முன்னாடி நின்னு விட்டார்கள். அப்பொழுது பாண்டியனை பார்த்து ராஜி டியூஷன் எடுத்து தான் நீ உன்னுடைய பொழப்ப பாக்குறியா? போதாதற்கு எங்கள் நகையையும் வாங்கிக்கிட்டு அதையும் வித்து தின்னுட்டீங்க. இப்பொழுது என் பொண்டாட்டி நகையும் வாங்கி வச்சுக்கிட்டு வெள்ளையும் சொள்ளையுமா சுற்றியே உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா என்று பாண்டியனை பற்றி சொல்லி கேவலப்படுத்துகிறார்கள்.

இதைக் கேட்டதும் பாண்டியன், ராஜி இடம் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா என்று கேட்கிறார். ராஜி என்ன சொல்வது என்று தெரியாமல் உண்மையை போட்டு உடைத்து ஆமாம் என்று சொல்லிவிடுகிறார். உடனே பாண்டியன் கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் பக்கம் தவறி இருப்பது போல் உணர்ந்து ஒட்டுமொத்த கோபத்தையும் ராஜி மற்றும் கதிரிடம் காட்டப் போகிறார்.

சும்மாவே இந்த பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார், தற்போது பாண்டியனை வச்சு செய்யும் அளவிற்கு மச்சான்கள் சீண்டிப் பார்த்ததால் ராஜிடம் மொத்த கோபத்தையும் காட்டப் போகிறார். ஆனால் இதை பார்த்துட்டு நம்ம ஹீரோ கதிர் சும்மா இருப்பாரா, நிச்சயம் ராஜிக்காக சப்போர்ட் பண்ணி அப்பாவை எதிர்த்து நின்று பேசப் போகிறார்.

ஆனால் ராஜி குடும்பத்தில் இருப்பவர்கள் பாண்டியனை திட்டும் பொழுது கூட பாண்டியன் பண்ணும் அராஜகத்திற்கு இதெல்லாம் தேவைதான் என்று சொல்லும் அளவிற்கு தான் இருந்தது. இதனை அடுத்து ராஜி மற்றும் கதிர் இந்த வீட்டை விட்டு வெளியே போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News