Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

யூடியூப் பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை.. மாதம்பட்டி கேட்டரிங்கின் பின்னணி என்ன?

யூடியூப் பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை.. மாதம்பட்டி கேட்டரிங்கின் பின்னணி என்ன?

மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் பிரபலமான பிறகு, சினிமா பிரபலங்கள் முதல் யூடியூப் பிரபலங்கள் வரை பலரும் அவருடைய கேட்டரிங்கை புக் செய்து வருகிறார்கள். குறிப்பாக திருமணம் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் இவருடைய கேட்டரிங் இடம்பெறுவது தற்போது அதிகமாகியுள்ளது. ஆனால், […]

மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் பிரபலமான பிறகு, சினிமா பிரபலங்கள் முதல் யூடியூப் பிரபலங்கள் வரை பலரும் அவருடைய கேட்டரிங்கை புக் செய்து வருகிறார்கள். குறிப்பாக திருமணம் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் இவருடைய கேட்டரிங் இடம்பெறுவது தற்போது அதிகமாகியுள்ளது.

ஆனால், உண்மையில் உணவு சுவையாகவும் தரமாகவும் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான யூடியூப் பிரபலங்களை அழைத்து உணவைப் பற்றி பேச வைத்து, அதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யூடியூப் சேனல்களில் விளம்பரம் செய்வது வேறு விஷயம். ஆனால் உணவு விஷயத்தில் மக்கள் பணம் கொடுத்து சாப்பிடுகிறார்கள் என்பதால், சுவை மற்றும் தரம்தான் முக்கியம்.

விளம்பரத்திற்காக பிரபலங்களை வைத்து பேச வைப்பதால் மட்டும் ஒரு உணவு நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்பட்டுவிடாது என்பதும் பலருடைய கருத்தாக உள்ளது.

புது டிஷ், அந்த டிஷ், இந்த டிஷ் என தொடர்ந்து யூடியூபில் விளம்பரங்கள் செய்யப்பட்டு, பெரிய தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் புக் செய்யப்படுவதன் மூலம் மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் பிரபலத்துக்கும், உண்மையான உணவின் தரத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை காலம்தான் சொல்ல வேண்டும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.