திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாணவியை காதலித்து மணமுடித்த மாதவன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை கதை

மாதவன் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த ஒரு நாயகனாக வலம் வருகிறார். தற்போதும் மாதவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது. மேலும் மாதவன் காதல் படங்கள் என்றால் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இவருடைய நடிப்பில் வெளியான அலைபாயுதே படம் தற்போது பலரது ஃபேவரட் படமாக உள்ளது.

இந்நிலையில் மாதவன் சரிதா பிர்ஜே என்பவரை 1999 இல் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு மாதவன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற தொடங்கியது. அதன்பிறகு 2005இல் வேதாந்த் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் 2022-ல் டென்மார்க் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். வேதாந்த ஏற்கனவே வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இந்நிலையில் மாதவன், சரிதா இருவரும் கிட்டத்தட்ட 23 வருட திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்துள்ளார்கள்.

தற்போது இவர்களது காதல் கதை வெளியாகியுள்ளது. அதாவது மாதவன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சரிதாவை சந்தித்துள்ளார். கோலாப்பூரில் மேடை பேச்சு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் சரிதா பங்கேற்று உள்ளார். அப்போது எலக்ட்ரானிக்ஸ் படித்த மாதவன் அங்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

அப்போது சரிதா விமான பணிப்பெண்ணாக ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்துள்ளார். அப்போது மாதவனை சரிதா டின்னருக்கு வெளியே அழைத்துள்ளார். அப்போது நான் கருப்பாக இருப்பதால் திருமணம் ஆகாதோ என்ற நினைப்பில் இருந்ததால் அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டேன் என மாதவன் தெரிவித்தார்.

அதன்பிறகு நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு 8 வருடங்கள் டேட்டிங் செய்து வந்தோம். அதன்பிறகுதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என மாதவன் ஒரே பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இவர்களது திருமணத்திற்கு பிறகு தான் மாதவன் தனது சினிமா கேரியரில் பிரபலமானார்.

Trending News