புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பிரதமருடன் அரண்மனை விருந்தில் கலந்து கொண்ட மேடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Actor Madhavan: 90களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்த மாதவன், இப்போதும் தரமான படங்களை நடித்தும் இயக்கி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிரான்ஸ் அதிபர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

மாதவன் மறைமுகமாக ஏதாவது கட்சி பொறுப்பில் இருக்கிறாரா என்றும் இந்த புகைப்படத்தை பார்த்த பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு பிரான்ஸ் பிரதமர் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக
இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

Also Read: விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

பிரான்சின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் அங்கு திரண்டு இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் வரவேற்பு அளித்தனர். அதன் பின்பு அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் தான் நடிகர் மாதவனும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் மோடியுடன் நடிகர் மாதவன் தலை ஒட்டி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை எடுத்து அதை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமருடன் பிரம்மாண்டமான அரண்மனை விருந்தில் கலந்து கொண்ட மேடி

madhavan-1-cinemapettai
madhavan-1-cinemapettai

Also Read: மணிரத்தினம் படத்தில் மாதவனுக்கு அடித்த ஜாக்பாட்.. மனசார விட்டுக் கொடுத்த நடிகர்

பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரானும் உடனான சந்திப்பு அரவணைப்பு போல இருந்தது எனவும், இரண்டு பெரும் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் என்றும் அந்தப் புகைப்படத்துடன் மாதவன் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மற்றும் மோடியுடன் மாதவன் தலை ஒட்டி எடுத்துக்கொண்ட செல்பி

madhavan-2-cinemapettai
madhavan-2-cinemapettai

தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் உடனும் மாதவன் கலந்துரையாடினார். மேலும் பிரான்சில் மாதவன் எப்படி இந்த பிரம்மாண்டமான இரவு விருந்தில் கலந்து கொண்டார், அவர் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Also Read: ரீ என்ட்ரி-யில் பட்டைய கிளப்பிய மேடியின் 5 திரைப்படங்கள்.. இரண்டு வருடம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த மாதவன்

Trending News